:
போதி தர்மர்,
மனதைச் சாந்தப்படுத்துகிறார்!
போதி தர்மர் சுவற்றைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்.அப்பொழுது, அவருக்கு அடுத்த தலைவராக வரக்கூடியவர், தன்னுடைய ஒருகையை வெட்டி அவருக்குக் காணிக்கை கொடுக்க வெளியே பனியில் நின்று கொண்டு, "என்னுடைய மனதை அமைதிப்படுத்த முடியவில்லை. மாஸ்டர் அவர்களே, என்னுடைய மனதை அமைதிப்படுத்துங்கள் ' என்று வேண்டினார்.
அதற்குப் போதிதர்மர், "நீ அந்த மனத்தை என்னிடம் கொண்டு வந்தால், உனக்காக நான் அதை அமைதிப்படுத்துகிறேன் ' என்றார்.
நான் அதை கொடுக்க முடியாது.ஏனெனில் அது என் கைக்கு அகப்படுவதில்லை.'
"அப்படியென்றால் உன் மனம் ஏற்கனவே அமைதியாகி விட்டது என்று அர்த்தம். 'என்றார்.
மனம் என்பதே பொய் மற்றும் அலை பாய்தல் தான், அதற்கு, தனித்த சக்தி எதுவும் கிடையாது. உயிர் தான் அதற்கு ஆதாரம். உயிர் இருக்கும் வரைதான் மனமும் இருக்கும்.மனம் அமைதியாகா விட்டால், அது காணாமல் போய் விடுகிறது. அதன் தோற்றம் ஆரவாரத்தில்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment