Thursday, December 29, 2016

ஜென் ஞானி ரை யூசு யு  சொல்கிறார்

ஜென் ஞானி
ரை யூசு யு  சொல்கிறார்
வெறுமைதான் உண்மையான வடிவம்
எல்லா உருவங்களையும் பிரித்து பார்த்தால் கடைசியில் மிஞ்சுவது வெறுமைதான்
அதைக் கொண்டே எல்லாம் வடிவமைக்க படுகின்றன
வெறுமை என்பது வடிவ மற்ற தன்மை யல்ல மாறாக உண்மைக்கு தரப்பட்ட வடிவம்

தியானம் என்பது கூட வெறுமைதான் மனதில் எண்ணங்களை காலி செய்தால் அது வே தியானம்
ஒரே பொருளை நினைப்பது தியானம் அல்ல அதற்கு எதிரானது

எதை வலுக்கட்டாயமாக திணித்தாலும் அது வெறுமையை ஏற்படுத்தாது
தானாக மலர்வது தானாக நடப்பது வெறுமை

கபூதி என்ற புத்த துறவி ஞானமடைந்த போது அவர் மீது மலர்கள் பொழிந்தது இருத்தல்

நாங்கள் வெறுமையை பற்றி உம் உபன்யாசத்தை கேட்டோம் அகம் மகிழ்ந்து மலர் . தூவி னோம் என்று அசரீரி கேட்டது
நான் எது மே பேசவில்லையே ஏதும் நினைக்க கூட இல்லையே என்றார் கபூதி
எதையுமே நினைக்காமலிருப்பது தானே வெறுமை பற்றிய சிறந்த உபன்யாசம்  என்று பதில் வந்தது

நாம் வெறுமையாவது என்பது தன் முனைப்பிலிருந்து விடுபடுவது தன்னிலிருந்தே விடுபடுதல்   பிணைப்புகளிலிருந்தும் விடுதலை ஆகும்

No comments:

Post a Comment