நாம் தயாராக இருந்தால்,
இந்தப் பிரபஞ்சமே நமக்கு உதவிக் கொண்டிருப்பது தெரிய ஆரம்பிக்கும்
எங்குமே செல்லத் தேவையில்லை
உதவிகள் வந்து கொண்டே இருக்கப்படும்
தேவைகள் எப்போதும் பூர்த்தி செய்யப்படும்
நம் மனம் எப்போது பிரபஞ்சத்தோடு இணைந்து இருக்கிறதோ,
அப்போது மனக் கதவு திறக்கும்
எப்படி சூரிய ஒளி தானாக ஊடுருவுவது போல் எல்லாம் தானாகவே நடக்கும்
மனம் என்னும் கதவு மூடப்பட்டிருந்தால்
மனக் கதவின் மீதும் மோதும்,
ஆனால் உள்ளுக்குள்ளாக ஊடுருவாமல் நின்றுவிடும்
இதனால் பிரபஞ்சத்திற்கு பாதிப்பு ஒன்றுமில்லை,
இழப்பு நமக்குத் தான்
எல்லாவற்றையும் ஏற்கும் குணம் இல்லையென்றால்
மனம் குறுகிய நிலையில் இருக்கிறது என்பது தானே அர்த்தமாக ஆகிறது
இருப்பதெல்லாம் இன்பம் மட்டுமே
நடப்பதெல்லாம் நன்மை மட்டுமே
துன்பமாகக் கொள்வதும்,
தீமையாக நினைப்பதும்
மனம் தான் காரணமே தவிர
இயற்கை அல்லவே
சிந்தித்தே தெளிவோம்
Thursday, December 29, 2016
பிரபஞ்சமே நமக்கு உதவிக் கொண்டிருப்பது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment