உடல் தாக்கப்படுகிறது. உடலின் மென்மையான இரத்தம் கொதிக்கத் தொடங்கி அது அதிகமாகி இருதயத்தைத் தாக்குகிறது. இதையே டென்ஷன் என்கின்றோம். குடும்பம் தொழில் கடன் இந்த மூன்றிலேயே இது ஏற்படுகிறது என்றாலும் பயங்கரமான டென்ஷன் ஏற்படுவதற்கு காரணம் பகைமை உணா்ச்சியே..குடும்பக் கோபம் தணியும். தொழிலின் கவலையும் தணியும்..கடன் கவலையும் தணியும். ஆனால் பகை உணா்ச்சி மட்டும் சீக்கிரம் தணியாது. ஒரு தடவை யார் மீதாவது பகை ஏற்பட்டு விட்டால் அது திடீர் திடீா் எனத் தோன்றும். கோடைக்கால மேகம் போல கூடும். விலகும்..எவரையாவது தாக்கத் தோன்றும் அதற்கான சக்தி இருக்காது..ஆத்திரம் மட்டும் தணியாது. மூடி வைத்த கண்ணாடிச் சீசாவுக்குள் அடைப்பட்ட ஆவி கொதிக்கத் தொடங்கினால் சீசா வெடித்துப் போகும். உள்ளுக்குள்ளே யே வெந்து கொண்டிருக்கும் பகை உணா்ச்சி எதிரியைத் தாக்காது..நம் உடலைத்தான் தாக்கும். பிறருக்குப் பகைவன் என்றுதன்னை வரித்துக் கொண்டு விட்டவன் தானே தனக்கு எதிரியாகின்றான். பகைவனுக்குஅருள்வாய் என்று சொன்ன ஞானிகள் எல்லாம் கருணையால் சொல்லவில்லை.ரத்தக் கொதிப்பு வராமல் இருக்க மருந்தைச் சொன்னார்கள். பகைவனே இல்லாமல் இருப்பது எப்படி.. சில விஷங்களை ஜீரணிக்க வேண்டும்.சிலவற்றை அலட்சியப்படுத்த வேண்டும். பெற்ற பிள்ளை தவறு செய்தால் அதை ஜீரணித்து அவனைத் திருத்த வேண்டும்.அடுத்தவன் உன்னை அவதூறு பேசினால் அலட்சியப்படுத்த வேண்டும். கத்தரிக்காயை பயன்படுத்தி அதன் காம்பை அலட்சியப்படுத்த வேண்டும். மாறாக காம்பை ஜீரணிக்க முயன்றால் ஜீரணமாகாது.காயை அலட்சியப்படுத்தினால் பசி அடங்காது...இன்றைய நற்சிந்தனைகளின் வழி நடப்போம். அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
.
Thursday, December 8, 2016
மனிதன் உணா்ச்சி வசப்படுவதால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment