ஹிந்து மதத்தில் சாவு வீட்டில் நடக்கும் சடங்குகள்,செத்தவரை பெருமை படுத்தவா? அல்லது கேவலப்படுத்தவா?
திருக்குறள் :
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
மரணத் தருவாயில் கசப்பு தீட்டு ஜலமாகிய முழுக்கு வெளியாகி ஒருவன் இறந்தான் என்றால்,அவனைத்தான் வேதம் தவறி விட்டான் என்று குறிப்பிடுகின்றது. அவர்களே மரணமாகிய மாரணத்தில் சிக்கியவர்கள்.அவர்களுக்கு கதி ஆரிருள் ஆகிய நரகமே என்று வேதம் குறிப்பிடுகின்றது.
இதுவே சிரசில் இருக்கும் தெய்வத் திருப்பாதத்தினை எட்டி மனிதத் தலையாகிய சிரசில் சென்று குடியேறும் மக்களே தேவர்கள் ஆகின்றார்கள். அவர்களே சிரஞ்சீவித் தன்மையினை எட்டி விட்டார்கள்.
மேலே குறிப்பிட்ட இந்த தீட்டு வெளியாகும் அடங்காமை நிலையினை எட்டியவர்களுக்கு செய்யும் சடங்குகளே இன்று நாம் சாவு வீட்டில் பார்ப்பது.ஞானிகளுக்கு உரிய சடங்கு வேறு.
பொதுவாக இன்று கடை பிடிக்கப் படும் சாவு வீட்டு சடங்குகள் அனைத்தும் ஆதி சைவ வழிப்பாட்டில் இருந்தே கடைபிடிக்க பட்டவை.இவை அனைத்தும் மெய்ஞானிகளால் எடுத்து வைக்கப்பட்ட சம்பிரதாயங்கள்.
ஆனால் இந்த சம்பிரதாயங்கள் என்ன குறிக்கின்றன?
1.தீட்டு: செத்தால் தீட்டு.அதாவது சாவுடைய நேரத்தில் இவனிடம் இருந்து கக்கிவிடும் கசப்பு ஜலமே தீட்டு என்று எடுத்து வைக்கப் பெற்றிருக்கின்றது.அப்படி தீட்டாகிய வீட்டிற்கு 40 நாட்கள் கட்டுப்பாடு என்று எடுத்து வைக்கப் பெற்றிருக்கின்றது. அதாவது அந்த தீட்டின் தன்மை அந்த வீட்டில் இருந்து மாறுவதற்கு 40 நாட்கள் ஆகும்.அதற்குள் அந்த வீட்டிற்கு சென்று வந்தால் நம்மை உப்பு போட்டு குளித்தல் வேண்டும்.நமது சூக்ஷும சரீரத்தை அந்த தீட்டு தாக்குவதால்,மேலும் மயன ரூபமான அசூசையான வாடை நம் ஜீவனில் படிந்து விடுவதால்,அதனை தடுக்க கிருமி நாசினியாகிய உப்பினை பயன் படுத்தி நமது சூக்ஷும சரீரத்தில் இது படியாமல் காத்து கொள்ள வேண்டும் என்று எடுத்து வைக்கப் பெற்றிருக்கின்றது.
இன்றோ மக்கள் பெயர் அளவில் கொஞ்சம் உப்புத் தண்ணீரை தலையில் தெளித்து விட்டு தங்கள் தங்கள் வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
2.சாணி சட்டியை கரைத்து வைத்தல்,விளக்குமாறு எடுத்து வைத்தல்:
செத்த உயிர் தனது வாழ் நாளில் அடைய வேண்டிய இறைவனின் திருப் பாதத்தினை எட்டாமல்,தவறி போனதால்,இவனுக்கு தவறி விட்டான் என்று பெயரும் வந்தது. பரிசுத்தமான ஜீவன் அசுத்தத்தை எட்டி அலகை என்று சொல்லக் கூடிய பிசாசு தேகத்தை இது எடுத்ததால்,இனி மனிதன் என்ற நாமம் மாறி பேய் என்ற நாமத்திற்கு ஆளானதால் "இனி நாங்கள் நல்லா இருக்க வேண்டும்,தயவு செய்து இங்கு வந்து விடாதே,அப்படி மீறி வந்தால் இந்த விளக்குமாற்றால் அடி விழும் என்று குறிக்கவே இந்த சடங்கு.
3.அவனுக்கு சூட்டிய நாமம் மாறி அவனை அது என்றும் பிணம் என்றும்,சவம் என்றும் அழைக்கப் பெறுகின்றது:
நமக்கு கொடுக்க பட்ட நாமம் இந்த உடலின் உள்ளே இருந்து இயங்கி கொண்டிருக்கும் நம் ஆகிய "உயிருக்கு" கொடுக்கப்பட்டது.அந்த நாமத்துக்கு சொந்தமான உயிர் பிரிந்ததால் அந்த நாமமும் அதோடு போய்விடுகின்றது.
4.எள்ளும் பொரியும் இறைத்து கொண்டே செல்லுதல்:
இறந்து அலைகைத் தேகம் தாங்கிய இந்த பேய்,அந்த உடலை சுடுகாட்டிற்கு இட்டு செல்லும் பொழுது அந்த உடலின் மேலே உள்ள பற்றின் காரணமாக அதன் மேலே இருந்து அழுது கொண்டேதான் போகும்.அப்படி சுடு காட்டிற்கு போன பேய் மீண்டும் தனது வீட்டின் மேல் உள்ள பற்றின் காரணமாக,வீடு வர முற்படும் என்பதனால் எள்ளும் பொறியும் அள்ளி போட்டால் அதனை தின்று கொண்டே வீடு வந்து சேருவதற்கு முன்பு விடிந்துவிடும் அப்படி அந்தப் பேய் இங்கு வந்து விடக் கூடாது என்பதற்கே இந்த சடங்கு.
4.பெண்களும் குழந்தைகளும் சுடுகாட்டிற்கு செல்லக் கூடாது.கொல்லி வைத்தவன் திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும்,ஏன் என்றால் பின் தொடர்ந்து வந்துவிடக் கூடாதாம்.
5.சுடு காட்டிற்கு சுற்றி சுற்றி கூட்டி போவது,அது தனது வீட்டிற்கு வழி கண்டு பிடித்து வந்து விடக் கூடாதாம்.
6.அந்தத் தெருவில் உள்ள கோவில்,அதாவது 6 வேளைப் பூசை செய்யும் கோவிலின் நடையை சாற்றுங்கள் என்று சொன்னால்,இவனுடைய தீட்டு எவ்வளவு மோசமானதாக இருந்தால் இப்படி எடுத்து வைத்திருப்பார்கள்?
7.சுடு காட்டிற்கு நாம் செல்லப் பயப்படுகின்றோம்.அப்படி அங்கே யார் இருக்கின்றார்கள்?நமது சொந்தக்காரர்கள்தானே? அப்படி இருந்தும் நாம் பயப்படுவது,செத்தவர் நல்ல நிலையை அடையவில்லை என்பதனை நாமே ஒத்துக் கொள்வதாகின்றது அல்லவா?
மரணம் = மாரணம் = மா + ரணம்
அதாவது பெரிய அவஸ்தை.
இப்போ சொல்லுங்க மக்களே அந்த நபர் கட்டி கொடுத்த வீட்டில் இருந்து கொண்டு மனைவி மக்கள் என்ன சொல்லுகின்றனர்?நாங்கள் நல்லா இருக்கணும் இனி இங்கு வந்து விடாதே என்று சொல்லக் கூடிய இறுதிச் சடங்கு அவரை பெருமை படுத்தவா அல்லது இழிவு படுத்தவா?இந்த இழிவிற்கு காரணம் இவன் நல்ல நிலையை அடையவில்லை என்பதே.
இந்த இழிவோடு இவனுக்கு நின்று விடுகின்றதா?
இவன் வாழ் நாளில் அருமையான மணத்தை அல்லவா விரும்பியவன்?அப்படி இருந்தும் இறுதியில் இவன் நாறிப் போகின்றான்.
பூமித் தாய் என்று சொல்லக் கூடிய பூமி மாதா,பிள்ளையை அரித்து தின்பார்களா?
இவன் எவ்வளவு பெரிய பாவியாக போனால் இவனது தேகத்தை புழுக்களும்,பூச்சிகளும்,மண்ணும் அரித்து தின்று விடுகின்றன?ஆனால் சித்தர் முத்தர்களின் உடலை மண் தீண்டாமல் பாதுகாக்கின்றது.
இப்படி பட்ட கேவலமான நிலையினை எட்டவா மனிதனுக்கு 6 அறிவு கொடுக்கப்பட்டது?
சிந்தித்து மரணத்தை வென்று,மரணம் இல்லாப் பெருவாழ்விற்கு நம்மை கூட்டி செல்லக் கூடிய சற்குரு இன்று எங்கே என்று தேடி,அறிந்து,அங்கே சென்று கூடி கொள்ளுங்கோ மக்கா.
அப்படி இன்று எங்கே மரணத்தை வெல்லும் செயல் நடக்கின்றது என்று கேட்கின்றீர்களா?
மெய்வழிச்சாலைக்கு விஜயம் செய்து மரணத்தை வெல்லும் உபாயத்தை அறிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment