இந்தியாவின் 5000 வருடப் பாரம்பரியமிக்க யோகா உடல் மற்றும் உள்ளத்தை புத்துணர்வாக்குவது என்பதை சர்வதேச யோகா தினம் யோகாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் யோகாவைப் பற்றிய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். தகுந்த ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் குறிப்பிட்ட ஆசனங்களை செய்துவந்தால் ஆண் பெண் தாம்பத்ய உறவு வலுப்பெறும் என்பது ஆச்சரியமான உண்மை.உடலுறவு சிறப்பாக அமைய சில முறைப்படுத்தப்பட்டயோகாசனங்கள் உள்ளன. மன அழுத்தம், புகை மற்றும் மதுப்பழக்கம், அதிக அளவு சர்க்கரை போன்றவை முழுதிருப்தியை தடுப்பவை. ஆனால் யோகா தொடர்ந்து செய்து வர, மனம் அமைதியடையும், உடலில் ரத்த ஓட்டம் சீராகும் அது உடலின் எல்லா பாகங்களும் பாய்ந்து உற்சாகத்தை ஏற்படுத்தும். இது உடலுறவில் ஈடுபடும் போதும்வெளிப்படும் என்கிறார் இந்தியாவின் முக்கியமான பாலியல் ஆய்வாளர் பிரகாஷ் கோத்தாரி.அவருடைய நோயாளிகளுக்கு அவர் பரிந்துரைப்பது இரண்டே ஆசனங்கள் தான். அவை சவாசனம் மற்றும் வஜ்ராசனம்.சவாசனம் செய்யும் போது உடலில் ரத்த அழுத்தம் சீராகும், பதற்றம் மற்றும் தூக்கமின்மை நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.வஜ்ராசனத்தைப் பொறுத்தவரை ஜீரண சக்தியை மேம்படுத்தும். அதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும் என்று விளக்கினார் கோத்தாரி. இவர் வொர்ல்ட் அசோசியஷன் ஆஃப் செக்ஷுவல் ஹெல்த் (WAS) நிறுவனர் மற்றும் ஆலோசகர்.புது தில்லியைச் சேர்ந்த யோகா நிபுணர் தீபக் ஜாசில ஆசனங்களைப் பரிந்துரைக்கிறார்.’பச்சிமோத்தாசனம், ஹலாசனம், புஜங்காசனம் போன்றவை ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்வதுடன் அவர்களின் உறுப்புக்களை வலுவாக்கும்’ என்றார்.மொத்தத்தில் யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உடல் மிகவும் வலிமைப் பெறுவதுடன் நீடத்த உடலுறவுக்கான உத்திரவாதமும் பெற முடியும் என்று சிறப்பு மருத்துவர்களும் யோகா நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.இக்கருத்தை மேலும் நிறுவ சமீபத்தில் 'ஜர்னல் ஆஃப் செக்ஷுவல் மெடிசன'் ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கியது. இருபது வயதிலிருந்து அறுபது வயது வரையிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் 12 வார யோகா பயிலரங்கில் பங்கேற்றேனர்.பயிலரங்கின் முதல் மற்றும் இறுதி நாளில் அவர்களின் உடலுறவு திருப்தி பற்றிய விரிவான கேள்வித்தாள்கள் தரப்பட்டன. யோகா செய்வதற்கு முன் மற்றும் பயிலரங்கு முடிந்த பின் உள்ள மாற்றங்களையும் நுட்பமாக கேள்வி கேட்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட அனைவருமே பயிற்சி வகுப்புகள் முடியும் தருவாயில் தங்களால் வெகு நேரம் உடலுறவில் திருப்தியுடன் ஈடுபட முடிந்தது என்று கருத்தைப் பதிவு செய்தனர்.படுக்கையறை வாழ்க்கை சிறக்க யோகாவுடன் பிரணாயாமமும் முக்கியம். முடிந்தால் கும்பகம் எனப்படும் மூச்சுப் பயிற்சியையும் தகுந்த குருமூலம் கற்றுக் கொண்டால் தாம்பத்ய உறவில் கவனம் குவிந்து மனம் மற்றும் உடலுக்கு அது மகிழ்ச்சியைத் தரும் என்கிறார் மனோதத்துவ நிபுணர் ஜோதி கபூர் மதன்.யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் மற்ற நல்ல அனுகூலங்களைக் கவனத்தில் கொள்வதுடன் படுக்கை அறையிலும் கூட பேருதவி செய்கிறது என்பது மிகையில்லாத உண்மை. யோக சாஸ்திரத்தை உலகிற்கு அளித்த இந்தியர்கள் உடலியல் விஞ்ஞானத்தில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்கள்.
Tuesday, May 31, 2016
ஆசனவாய் தசையை வலுவடைய செய்யும் அஸ்வினி முத்திரை
அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம்.இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க வழி என்ன என்றுபுலம்புபவர்களுக்கு இதை விட சிறந்த வழி வேறு இல்லை.உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசன வாயில்(சுருங்கும்இடத்தில) வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுகிறது. இந்த முத்திரை செய்வதால்மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் தீரும். ஆசனவாய்த் தசையும் வலுவடையும்.பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும்.செய்முறை :விரிப்பில் தியானம் செய்வது போல் அல்லது பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு குதம் வெளியேறும்பகுதியை மெதுவாகச் சுருக்கி இழுத்துப் பிடிக்கவேண்டும். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும்செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்.
ஜென் தியானம் செய்யும் முறை
ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாகஇருக்க வலியுறுத்துகிறது.எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.
1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.
2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்
3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டதுஎன்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.
4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒருபார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.
5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள்குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம்எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான்மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.
6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சிலமைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும்.உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும்அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.
7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்குவிருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால்தியானமும் நிகழாது.
8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமேஇங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும்தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.
9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம்உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென்பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.
சுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது எப்பட
சுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது எப்படி?
share
காலையில் தூங்கியெழுந்தவுடன் காலை கடன்களை முடித்து வெறும் வயிற்றிலோ அல்லது காபி டீ சுடுதண்ணீர் அருந்தி விட்டு சுகமான ஆசனத்திலோ, நாற்காலியிலோ அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதை சுவாசத்தின் மீது எந்த மந்திரத்தையும் உச்சரிக்காமல் முழு கவனத்தையும் இயல்பாகவும் மென்மையகவும் உள்சுவாசம் மேலே செல்வதைகவனியுங்கள்.
பிறகு சுவாசம் சற்று நிற்கும் இடத்தில்[சுழுமுனையில்] சுவாசத்தை நிறுத்தி உற்று கவனியுங்கள். அதன்பின் வெளிசுவாசம் இறங்கி நிற்பதையும் கவனியுங்கள். தொடர்ந்து வேறு எந்த ஒருநினைப்பும் இன்றி தினமும் இருபது நிமிடங்கள் நாற்பது நாட்கள் இந்த யோகத்தை பயிற்சி செய்தால் போதும். நீங்கள் நினைத்த,நினைக்காதவைகள் கண்டிப்பாக நிறைவேறும்.
வாதம், பித்தம், சிலேத்துமம் குறைந்தாலும், அதிகமானாலும் வருகின்ற சகல தீராத நோய்களான முக்கியமாக மூட்டு, வலி, நரம்பு வலி,காக்காய் வலிப்பு, பக்கவாதம், ரத்த அழுத்தம், இருதயநோய், குழந்தையின்மை, முடி கொட்டுதல் சர்க்கரை, செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை, ரத்த சோகை, ரத்த வாந்தி, கல்லீரல், மூலம், பித்தப்பை கல், இருமல், சளி, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நோய்கள் கண்டிப்பாக நீங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
இரவில் தூக்கம் வராதபோது, மிகுந்த கோபம், காமம், குரோதம் ஏற்படும் தருவாயில், விடை காணமுடியாமல் யோசிக்கும்போதும், நீண்டநேரம் தாம்பத்தியம் நீடித்திருக்கவும், முக்கியமாக கணவ்ன், மனைவி, குழந்தைகள் மற்றும் நம் உறவுகளுக்கிடையே பிரச்சனை எழும்போதும் உடனே சுவாசத்தைக் கவனித்தால் போதும். உடனே நல்ல தீர்வு ஏற்படுவதைக் காணலாம்.
பலன்கள் :
இந்த தலை சிறந்த யோகத்தின் பயிற்சியின்போது சுவாசமானது அடி முடிஅதாவது தலைமுதல் உள்ளங்கால் வரை சென்று கூடவே ரத்த அழுத்தத்தை சமசீராக்கி, கபம் என்ற சளியை கறையவைத்து எல்லா பகுதிக்கும் தங்கு தடையின்றி அழைத்து செல்கிறது. அதனால் மனமும், உடலும் மிதமான தட்ப வெட்ப நிலைக்கு அதாவது அசுத்ததேகம் சுத்தப்ரணவதேகமாக மாறுபட்டு வாதம் காற்று – பித்தம் நெருப்பு –கபம் நீர் நம் தேகத்தில் அதனதன் விகிதாசாரத்தில் மாறி ரத்த ஓட்டம் தடையின்றி செல்லும் தருவாயில் ஐந்து நிமிடங்களில் அபாணவாயு திறந்து மலசிக்கலை நீக்கி மிகினும், குறையினும் உள்ள மும்மலங்கல் கண் கூடாக வெளியேறி பித்தம் தலைக்கேறாமல் சித்தத்தை தெளியவைத்து காயத்தில் உருவாகும் சகல நோய்கள் நீங்கி மனம் தெய்வீகமாகி உடலை வழி நடத்தி ஷேத்திரமாக்கும் யோகமாகும்.
குரங்குகள் தின்பதற்கு,
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு, பழங்கள் கொடுத்தோம்.
எங்களை அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்...
ஆச்சர்யமாய் இருந்தது..
விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்...
"சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால், தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால், இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன......
இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...
வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவன்களாக மாறிவிடுகின்றன...
எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...
நிறைய யோசிக்க வைத்தது...!
- இலவச அரிசி வாங்கி, இலவச டிவி பார்க்கும், நம்ம ஊர் மக்களுக்கும் இது தான் நடக்கிறது. உழைக்கவே மனம் வருவதில்லை.....!!!
வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நன்றி - இணையம்.
அஸ்த்திரம்
---------அஸ்த்திரம்-------
உயிரை போத்தியிருக்கும் உடல் அஸ்த்திரம் அல்ல. சீர்குலைக்கும் மனதின் உடலைப் பேணி காக்கும் உயிரே அஸ்த்திரம். நிலையற்ற உடலை நிலையாக ஒழுங்கு படுத்தும் உயிரின் பிரம்மமே பிரமாஸ்த்திரம்.
கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி...ஒரு உஷார் ரிப்போர்ட்.
கார்பைடு மாம்பழங்களை கண்டறிவது எப்படி...ஒரு உஷார் ரிப்போர்ட்...!!!
முக்கனி என்று அழைக்கப்படும் மா,பலா,வாழை யில் மாம்பழத்திற்கு மயங்காதவர்களே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை நம் நாவை சுண்டி இழுக்கும்.மேலும் மேலும்சாப்பிட வைக்கும்.
மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில் காணும் இடங்களிலெல்லாம் மாம்பழக்கடைகள் முளைத்துள்ளன. சீசனும் மாம்பழத்தின் மீதான மக்களின் ஆர்வமும் பல இடங்களில் மாம்பழக்கடைக்காரர்களை தடுமாற வைக்கிறது. விற்பனையை அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்கவைக்கின்றனர். மாம்பழ ஆசையில் அதை பரிசோதிக்காமல் வாங்கி உண்டுவிட்டு உடல்நிலையை கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.
தற்போது தமிழகத்தின் சராசரி வெப்பநிலையே 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொல்லும் அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடையில் அதிகம் விளையக்கூடிய மாம்பழம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுறுத்தலுக்கு உரியது. அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயுவின் மூலம் மா, வாழை போன்றவைகளை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் சாதாரண ஒரு காய் 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும், அதிக விற்பனையை கருத்திற்கொண்டு பழ வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்.
இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படும். கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாகவும், தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும், தோலை நீக்கிப் பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மக்கள் கண்டறிய முடியும்.
அவசர உலகத்தில் இதனை கண்டறியும் மனமோ,நேரமோ இல்லாத அப்பாவி மக்கள் ஏமாந்து வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால் வியாபாரிகள் மத்தியில் கார்பைடு மூலம் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைப்பற்றி வேறுவிதமாக சொல்லப்படுகிறது.
“அந்தக் காலத்தில் பழங்களைப் பழுக்கவைக்க புகைமூட்டம் போடுவார்கள். அதற்கு அவசியமான காற்றுப் புகாத அறைக்கு வாய்ப்பில்லாததால் அதற்கு பதிலாகத்தான் நவீன முறையில் கார்பைடு கல் வைத்துப் பழுக்க வைக்கிறோம். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். மருத்துவ ரீதியாக கால்சியம் கார்பைடால் எந்த கெடுதியும் கிடையாது. கார்பைடு பழங்கள் பற்றி வருவதெல்லாம் பெரும்பாலும் வதந்திகள்தான்” என்று மறுக்கின்றனர்.
பழ வியாபாரிகள் மனசாட்சியோடு நடக்கவும், அதனை உண்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் என்று எண்ணி இது போன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட கடைகளை தொடர்ந்து இரவு பகல் பாராது திடீர் திடீரென்று ஆய்வு செய்து கண்காணித்து கார்பைடு பழங்களை அழித்து மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டு
ஜேஎஸ்ஆர்