Tuesday, June 14, 2016

Small joke. Conductor

டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-

No comments:

Post a Comment