Friday, June 17, 2016

ஒரு உயிர் தன்னை யார் என்று உணராமல் உடல் விட்டுப் போவது மரணம்.

ஒரு உயிர் தன்னை யார் என்று உணர்ந்து தானாக உடல் மனம் கடந்து போவது விடுதலை.

ஒரு உயிர் துன்ப துயரங்களின் பாதிப்பு இல்லாமல் அன்பாக ஆனந்தமாக வாழ்வது முக்தி.

ஒரு உயிர் சக்தி உடல் மனம் கடந்து அமைதியில் உறங்குவது சமாதி.

ஒரு உயிர் அதீத இன்பம் காண்பது பரவச நிலை.

இன்ப துன்பங்களை சமநிலையில் இருந்த கொண்டு அனுபவித்து வாழ்வது ஆனந்தம்.

துன்பங்களே தெரியாமல் வாழும் ஆனந்தமே பேரானந்தம்.

இன்பம் துன்பம் இரண்டும் இல்லாத பேரானந்த நிலையில்......

அந்த படைப்புடன் உயிர் ஒன்றி கலந்து எல்லையற்ற  தன்மையாகவும் மாறிப் போவது ப்ரம்மானந்தம்.......!!!

No comments:

Post a Comment