Thursday, June 16, 2016

சிந்தனைத் திறனை வளர்க்க

"சிந்தனைத் திறனை வளர்க்க மூன்று இணைப்பு
முறைகளைப் பின்பற்ற வேண்டும் :"

.
1) திட்டமிட்டுச் செயல் புரிதல் (Planned Work)
.

2) விழிப்பு நிலை (Awareness)

.
3) தற்சோதனை (Introspection)

.
இவற்றில், விளைவைக் கணித்து அதற்கு ஏற்ற அளவிலும் முறையிலும் மனம், மொழி, செயல்களைப் பயன்படுத்தலே "திட்டமிட்டுச் செயல்புரிதலாகும்" (Planned work).

.
தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றால் உணர்ச்சிவயப்படாது தன்னையும் தான் அடையவேண்டிய பயனையும் மறவாத விழிப்பு நிலையிலே செயலாற்றும் திறன் தான் "விழிப்பு நிலையாகும்" (Awareness).

.
ஒவ்வொரு செயல் முடிவிலும் விளைவைக் கணித்து, தான் செய்த முறை அதில் விளைந்த தவறுகள் அல்லது நன்மைகள், இவற்றைச் சிந்தித்து உணர்வது;  ஒவ்வொரு நாளும் இரவு படுக்குமுன்,  அன்று தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைவிற்குக் கொண்டுவந்து தன் செயல்களைச் சோதிப்பது;  செயலில் தவறு கண்டால் இனி அத்தவறு ஏற்படாத உறுதி கொள்வது;  நலமாக இருந்தால் அந்த முறையை அழுத்தமாக மனதில் பதிவு செய்துகொள்வது;  இவை அனைத்தும் இணைந்த முறையே அகத்தாய்வுச் செயலாகும் (Introspection).

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment