Wednesday, June 15, 2016

Efforts never fails

🐝 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது....!!!

🐝 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது.....!!!

🐝 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது.....!!!

🐝 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது.....!!!

🐝 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது.....!!!

🐝 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது.....!!!

🐝 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது......!!!

🐝பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது......!!!

🐝 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது.....!!!

🐝 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது.....!!!

🐝தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்.....!!!

🐝 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்.....!!!

👉முயல்வோம்...

No comments:

Post a Comment