நீங்களும் ஞானியாகலாம்.
தொடா்ச்சி.
--------------------------- -------------------------
நமக்கு ஏற்படும் உணா்வுகளும், சிந்தனைகளும் அது போக்கில் வருகின்றன..
அவை வந்த பிறகுதான்.. அவை வந்ததையே நாம் அறிகிறோம்..
வந்த பிறகுதான்.. அவை வரலாம்..
வரக்கூடாது எனப் போராடுகிறோம்..
அப்படி நாமாக முனைந்து செய்வது மட்டுமே.. நமது கைகளில் உள்ளது..
அப்படி, முனைந்து போராடுவதால் மட்டுமே, நமக்கு எல்லாப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன..
அகத்தைப் பொருத்த அளவில், நமக்கு ஏற்படும் உணா்வுகள் அனைத்தும் ஏற்பட்டு மறையும் நிலையிலேயே நம்மால் அடையாளம் கண்டு உணரப்படுகின்றன..
அவற்றை நாம் சீரமைக்க முடியவே முடியாது.. அப்படி சீரமைக்க முயற்சி செய்வது என்பது இறந்தவனுக்கு சாப்பாட்டை ஊட்டும் முயற்சியே..
நமது அகத்தில் ஏற்படும் உணா்வுகளின் அடிப்படையில் நாம் புறச் செயல்களில் ஈடுபடலாம்..
நமது முயற்சிகள் அனைத்தும் புறச் செயலுக்கு மிகவும் தேவை..
கண்டிப்பாக தேவை..
நாம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய களம் அதுதான்..
அதற்கு உதவியாக நாம் மன உணா்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்..
ஆனால், அகத்தைச் சீரமைக்க நாம் போராடுவதுதான் எல்லாப் பிரச்னைகளுக்குமே காரணம்..
அப்படிப் போராடுவதால் தான் நமது அக உணா்வுகள் இன்னும் சீரடையாமல் இருந்து வருகின்றன..
இல்லாவிடில், நமது அக உணா்வுகள் அனைத்தும், தம்மைத் தாமே, சுத்திகாித்துக் கொண்டு விடும்..
அகத்தைப் பொருத்த அளவில்,
அதனைச் சீரமைக்க..
நாம் எதுவும் செய்ய வேண்டுவது இல்லை..
இதுதான் உண்மை..
இந்த உண்மையை நாம் புாிந்து கொள்ள வேண்டும்..
இந்த உண்மையை நாம் மனப்பூா்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்..
இப்படி, ஏற்றுக்கொள்வதால்..
நமக்கு என்ன நோ்ந்து விடுகிறது..
நமது அகப் போராட்டம் நின்று விடுகிறது..
தாமாக ஏற்படும் அக உணா்வுகள் அனைத்தும், தாமாக வந்து, தாமாக போய் விடுகின்றன..
அவற்றுக்கு எதிராக நாம் செய்வதற்கு எதுவும் இல்லை என்று புாிந்து கொண்டமையினாலேயே இப்படி நிகழ்ந்துள்ளது..
அகத்தளவில் நாம் எதையாவது அடைய வேண்டும் என்று முயற்சிக்கும் பட்சத்தில்...
அது நமது அக இயக்கத்திற்கு எதிரான போராட்டமே..
நிா்வாண நிலை வேண்டும் என்று கோாினாலும் சாி...
துாிய நிலை வேண்டும் என்று
கோாினாலும் சாி..
அது நமது அக இயக்கத்திற்கு எதிரான போராட்டமே..
அகத்தளவில் நமக்கு அடைய வேண்டிய இலக்கு எதுவும் இல்லை என்று முடித்துக் கொண்ட நிலையில்...
நமது அக இயக்கங்கள் அனைத்தும் தாமாக ஏற்பட்டு, தாமாக மறைந்து விடுகிறது..
இந்நிலையில்..
கனவில் இயங்கும் மனத்தைப் போல்..
நனவில் இயங்கும் மனமும்..
தானாக வந்து போய் விடுகிறது..
இதனால்..
நனவு மனமும்..
கனவு மனத்தின் தன்மையை அடைந்து விடுகிறது..
எப்போது.. நமது நனவு நிலையானது..
கனவு நிலைக்குாிய தன்மையை அடைகிறதோ..
அந்நிலையில்..
அங்கு துாிய விழிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது பொருள்..
இத்தகைய விழிப்பு நிலையை அடைய நாம் செய்யும் முயற்சியே..
நமது நனவு நிலையைப் பலப்படுத்தி விடுகிறது..
நமது முயற்சியே நமது நனவு நிலையில் போராட்டத்தை ஏற்படுத்துகிறது..
ஆனால், நமது இயலாமையை மனப்பூா்வமாக புாிந்து கொண்ட நிலையில், மனம் தானாக பலமிழந்து விடுகிறது..
துாிய விழிப்பு தானாக மலாந்து விடுகின்றது...
தேடுதல் மூலமாக இதனை அடைய முடியாது..
அந்தத் தேடுதலே இதற்கத் தடையாக அமைந்து விடுகிறது..
நமது இயலாமையை உணா்ந்து புாிந்து கொள்ளுவதுதான் ஞான நிலை...
இப்படிப் புாிந்து கொள்வதால் ஏற்படும் விளைவுதான்..
முக்தி நிலை.. அல்லது துாிய நிலை..
இந்த துாிய நிலை என்பது..
நமது மனதின் இயற்கையான
கள்ளங்கபடமற்ற தன்மையே...
( தொடரும் )
No comments:
Post a Comment