ஈஸ்னோபீலியா !!!
சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்றன இரத்தத்தில் ஈஸ்னோபில் அதிகமாகும் போது அறிகுறிகளாகத் தோன்றும்.
நமது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் இருப்பது போல ஈஸ்னோபில்கள் என்ற அணுக்களுமுண்டு.
இவை நம் உடலில் நோயை உருவாக்கும் நுண்கிருமிகள் உட்செல்லும் போது
அவற்றுடன் போராடுகின்றன.
அவ்வாறு போராடும் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது
நோய்க்கிருமிகள் வெற்றி பெற்று விடுகின்றன.
அந்த நிலையில்தான் நோயின் அறிகுறிகள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன.
எனவே நோய்க்கிருமிகள் உள்ளே நுழைந்து நோயை ஏற்படுத்தியவுடன்
அதை நமக்கு உணர்த்துவதற்கான ஈஸ்னோபில்ஸ் என்ற அணுக்கள்
தன் எண்ணிக்கையில் இருந்து அதிகமாகி விடுகிறது.
இதைத்தான் நாம் ஈஸ்னோபீலியா என்று கூறுகிறோம்.
எனவே ஈஸ்னோபீலியா என்பது ஒரு நோய்க்கான அறிகுறியே அன்றி
அது ஒரு நோய்க்கான காரணம் அல்ல.
ஆஸ்துமாவிற்கு முந்தைய நிலையே ஈஸ்னோபீலியா எனப்படும் ஒருவகை ஒவ்வாமை.
ஈஸ்னோபில்ஸின் அளவு
மற்ற நோய்களைவிட
ஆஸ்துமா நோயில் சற்று அதிகமான எண்ணிக்கையில் உயர்ந்து விடுகிறது.
இந்த ஈஸ்னோபில்ஸின் அளவை நாம் இரத்த பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக 3லிருந்து 7 வீதம் என்ற அளவு இருக்க வேண்டும்.
இந்த அளவிற்கு மேலே இருப்பின்
உடலில் தொற்று நோய்க் கிருமிகள் சென்றுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.
மருந்து ஓன்று
ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர் விட்டுவைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் இரைப்பு நீங்கும்.
மருந்து இரண்டு
50 கிராம் வில்வ இலைத்தூளுடன், 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபீலியா என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும் என நவீன அறிவியலால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பரிய முறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருந்து மூன்று
நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy) மற்றும் மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில், அரை ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை சாப்பிட்டுவந்தால், படிப்படியாய் நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் துவங்கும்.
மருந்து நான்கு
ஆஸ்துமா ஏற்படுத்தக் கூடிய, பயோகெமிக்கல் அமைப்பை போக்குவதில்
வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆஸ்துமா நோயாளிகள் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
இவை கபம் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.
வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.
மருந்து ஐந்து
வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
மருந்து ஆறு
தூதுவளை, துளசி, முசுமுசுக்கை, கண்டங் கத்திரி ஆகிய நான்கையும் காயவைத்து,
வகைக்கு நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும்.
இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஜாதிக்காய், மாசிக்காய், ஜாதிப்பத்திரி, ஏலக்காய், கருஞ்சீரகம், அக்ரகாரம், கடுக்காய் ஆகியவற்றை
வகைக்கு பத்து கிராம் எடுத்து,
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) பொடியை எடுத்து
, தேனில் குழைத்து
தினம் இருவேளை சாப்பிட்டு வர
, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீ ரும்
சைனஸ் - தொடர் தும்மல் குணமாக...
தூதுவளை, குப்பைமேனி, துளசி, நிலவேம்பு, திப்பிலி, அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு பத்துகிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் தட்டிப்போட்டு கசாயமிட்டு, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
அர்த்த புஜங்காசனம்
செய்முறை:
விரிப்பில் வடக்கு நோக்கி அமர்ந்து கால்களை பின்னே நீட்டி, குப்புறபடுங்கள். உள்ளங்கை முதல் முழங்கை வரை தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டத்தில் இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் இருப்பது அவசியம். நெற்றி, மூக்கு, கீழ்மோவாய் வரை தரையில் கிடத்தி, பிறகு மேலிருந்து கீழாக நெற்றி, மூக்கு, கீழ் மோவாய் வரை கழுத்தை உபயோகித்து தலையை தூக்கவும். முழங்கைகளை சற்று அழுத்தி தோள் பட்டை-இடுப்பு வரை, உடலை மெல்ல மெல்ல மேலே தூக்குங்கள். இதே நிலையில் 15 விநாடிகள் இருந்து ஆசனத்தை கலைக்கலாம்.
பயன்கள்:
சளி, டி.பி, ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா வராது.
வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து.
துவர்ப்புத்தன்மையும் மலமிளக்கித்தன்மையும் பசியை உண்டாக்கும்.
சித்த மருத்துவத்தில் வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்குக் கொடுக்கலாம்
(பெப்டிக் அல்சர்). இதனை நாமே வீட்டில் செய்து கொள்ளலாம்.
வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி,
ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்தில் காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும்.
காலையில் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும்
வில்வப் பட்டையைக்கொண்டு செய்யும், வில்வாதி லேகியம் நல்மருந்து.
உணவு முறைகள்
சாதாரணமாக எளிதில் ஜீரணமாகும் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
வேளையும் முக்கால் வயிறு ஆகாரமே உட்கொள்ள வேண்டும்.
மேலும் இரவு உணவை 7 மணிக்குள் முடித்தல் வேண்டும்.
உணவில் அதிகளவு தானியங்களை அடிக்கடி சேர்க்க வேண்டும்.
ஒரு நாளின் மொத்த உணவில் நாலில் ஒரு பங்கு காய்கள், பழங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
இந்நோயாளிகள் பப்பாளி, பேரீச்சை, மா, மாதுளை, கேரட், வெண்டை,
கரும்புச்சாறு, இளநீர், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து
ஏதேனும் இரண்டு வகை உணவில் அதிகளவு சேர்த்து உண்பது நன்மை பயக்கும்.
கொத்தமல்லியிலை, புதினா, தூதுவளை, துளசி போன்றவற்றில் இருந்து சாறு எடுத்து
50 மில்லி லிட்டர் காலை அல்லது மாலை வேளைகளில் வாரம் இரண்டு முறை பாவித்து வரப் பயன் கிடைக்கும்.
தினமும் காலை மாலை எளிய உடற்பயிற்சிகள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும்.
தவிர காலை, மதியம், மாலை மூன்று வேளை உணவு அருந்தும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்தல் அவசியம்.
பின் வரும் உணவுகளைத் தவிருங்கள் (To be avoid):
1. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, பைன் ஆப்பின், வாழைப்பழம், கொய்யப்பாழம், தர்ப்பூசணி போன்ற பழங்களைத் தவிருங்கள்.
2. கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் தயிருடன் கலவை (Salad) செய்து சாப்பிடுவதை தவிருங்கள்.
3. உலர்ந்த உணவுகளில் (Dry food) முந்திரிப் பருப்பு, தேங்காய் கலந்த உணவுகள், கடலைப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றைத் தவிருங்கள்.
4. சமைத்த உணவுகளை அளவுக்கதிகமாய் சாப்பிட வேண்டாம். மிகவும் காரமான உணவுகள் கூடாது. பிரெட், பிஸ்கட், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், முட்டை மற்றும் அசைவம், எண்ணெய்களில் வறுத்த கோதுமை உணவுகள் போன்றவற்றை அவசியம் தவிருங்கள்.
5. குளிர்பானங்களில் எலுச்சைச் ஜூஸ், லிம்கா, கோக், பழச்சாறுகள், பால் மற்றும் பால்சார்ந்த உணவுகளை தவிருங்கள்.
5. ஜாம் மற்றும் ஜெல்லி, ஜாஸ் (Sauce), சாக்லேட், வெண்ணெய், ஐஸ்கிரீம், ஒயின், இனிப்புகள் போன்றவற்றை தவிருங்கள்.
உணவினால் ஏற்படும் ஒவ்வாமையைக் கண்டறியுங்கள்:
முன் அத்தியாயத்தில கூறப்பட்டுள்ள உணவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சாப்பிடும்பொழுது
கீழ்க்கண்ட பாதிப்புகள் உங்களுக்கு இருந்தால்,
உணவினால் ஒவ்வாமை (Allergy) ஏற்பட்டு, உங்களுக்கும் ஆஸ்துமா வரலாம்.
ஒவ்வாமை காரணிகள்:
1. கண்களில் அல்லது மூக்கில் அரிப்பு இருந்தால்
2. மூக்கு அடைபட்டுக்கொண்டால்
3. மூக்கில் நீர் கொட்டுதல் இருந்தால்
உங்களுக்கும் ஆஸ்துமா வரலாம்.
ஆஸ்துமாவைத் தவிர்க்க ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிருங்கள்.
உங்கள் உணவைப் பற்றி ஆழ்ந்து யோசியுங்கள்.
இன்றைய உடற் குறைபாட்டிற்கு நேற்றைய உணவுகளே காரணமாய் இருக்கலாம்.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளைப் பட்டியலிடுங்கள்.
பின்பு அவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள்.
ஆஸ்துமா நீங்க - மூலிகை உணவுகள் (HERBAL FOOD) :
எமது மருத்துவ முறை முற்றிலும் உணவு முறைகளை அடிப்படையாய் கொண்டதேயாகும்.
ஏனெனில், உயிர் ஆதாரம் பெற உணவே ஆதாரம்.
இரண்டு நாள் பட்டினி கிடந்தவனுக்குத்தான் ஒரு பிடி சோறின் மகத்துவம் தெரியும்.
ஒரு வாய் சோறு உள்ளே சென்றவுடன் ஏற்படும் பரவச உணர்வைப் பட்டினிக் கிடந்து அனுபவித்துப் பாருங்கள்.
அது ஒரு சுவையான சுகமாகும்.
இந்தப் பகுதியில் நாம் இயற்கையான மூலிகைகளோடு,
சில உணவுப் பண்டங்களையும் இணைத்து, செய்யப்படுகிற சில உணவு வகைகளைப் பற்றி இங்கு காண்போம்.
ஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை :
தூதுவளை - 1 கைப்பிடி
உளுந்து - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
தோசை மாவு - 7 கரண்டி (நடுத்தரமான கரண்டி)
தூதுவளைக் கீரையை முள் நீக்கி எடுத்து, சிறிது நெய்விட்டு வதக்கவும்.
பின்னர் கீரையுடன் உளுந்து சீரகம் சேர்த்து விழுதாய் அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்க்கவும்.
மூச்சிரைப்பினால் கஷ்டப்படுகிற ஆஸ்துமா நோயாளிகளுக்கு
இந்த தோசை அற்புதமான மருந்தாகும்.
வேலை செய்யும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
ஆஸ்துமாவில் இருமல் நீங்க முசுமுசுக்கை தோசை :
முசுமுசுக்கை கீரை - ஒரு கைப்பிடி
ஏலக்காய் - 2
சீரகம் - 10 கிராம்
மிளகு - 5 எண்ணிக்கை
தோசை மாவு - 7 கரண்டி
(நடுத்தர கரண்டி)
ஒன்று முதல் நான்கு வரை உள்ளவற்றை ஒன்றாக கலந்து
கோழி முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து விழுதாய் அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்க்கவும்.
நெஞ்சில் உறைந்து கிடக்கும் கபம் வேரோடு வெளிப்படும். வறட்டு இருமல், தலைவலி உடனே தீரும்.
கல்யாண முருங்கை அடை :
கல்யாண முருங்கை இலை - ஒரு கைப்பிடி
சீரகம் - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 2 எண்ணிக்கை
பச்சை மிளகாய் - 2 எண்ணிக்கை
அரிசி மாவு - 1/4 கிலோ
கல்யாண முருங்கை இலையையும், சீரகத்தையும் விழுதாய் அரைத்து
அரிசி மாவுடன் கலந்து சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நறுக்கிச் சேர்த்து சிறது உப்பு கலந்து அடை செய்யவும்.
இதனால் ஜீரண சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் (Red Blood Cells) அதிகரிக்கும். ஆஸ்துமாவை கட்டுக்குள் கொண்டுவரும்.
ஆஸ்துமாவிற்கு ஏற்ற இஞ்சித் துவையல் :
இஞ்சி - 25 கிராம்
முழுப்பூண்டு - 2 எண்ணிக்கை
பச்சைமிளகாய் - 5 எண்ணிக்கை
உளுத்தம்பருப்பு - 5 கிராம்
தேங்காய் - 10 கிராம் (துருவலாக)
நல்லெண்ணெய் - 20 மி.லி.
இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக அரிந்துகொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சிறிது கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும்
நல்லெண்ணெயில் இட்டு பச்சை வாசம் போகும் வரை நன்கு கிண்டவும்.
பின்னர் சிறிது உப்பு சேர்த்து விழுதாய் அரைத்து எடுக்கவும்.
இத்துவையலை தோசை, சப்பாத்தி, இடியாப்பம் போன்றவைகளுடன் இணைத்து சாப்பிட
ஜீரணம் முறையாய் நடைபெறும். பித்தம் தணிக்கும்.
ஆஸ்துமா நோயாளிகள் அடிக்கடி இஞ்சித் துவையல் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்
Msg collections by RAJAJI JS. 14.02.2016
No comments:
Post a Comment