செக்ஸ் பற்றி ஓஷோ சொல்லுகிறார்
நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன்.உண்மையில் எழுதியதல்ல.என் பேச்சை தொகுத்து
எழுதியிருக்கிறார்கள்.அதன் தலைப்பு,காமத்திலிருந்து கடவுளுக்கு.அதற்கு பிறகு
என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு
விட்டன.
ஆனால்,மற்றவற்றை படித்தார்களா என்பது சந்தேகம்தான்.குறிப்பாக
இந்தியாவில் எல்லாரும் படித்ததுகாமத்திலிருந்து கடவுளுக்கு என்ற
புத்தகைத்தான்.அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம்
செய்தார்கள்.எதிர்த்தார்கள்.இன்னும் அதை பற்றி கட்டுரைகளும்,மறுப்பு நூல்களும்
எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள்.மகாத்மாக்கள் அதை மறுத்து கொண்டே
வருகிறார்கள்.மற்ற புத்தகங்களை பார்க்கவும் இல்லை.குறிப்பிடவும்
இல்லை.புரிகிறதா?நான் ஏதோ ஒரே புத்தகத்தைதான் எழுதியது போல.
மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள்.காமமே காயமாகி விட்டது.அதை குணப்படுத்தியாக
வேண்டும்.உடலுறவில் ஏற்படும் பரவசம்,தியானத்தின் ஒரு சிறு பகுதியின்
ஆரம்பத்தை,உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும்.காரணம்,அப்போது மனம் நின்று
விடுகிறது.காலம் நின்று விடுகிறது.அந்த சில வினாடிகளில் காலமும்
இருப்பதில்லை.மனமும் இருப்பதில்லை.நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும்
ஆழ்ந்து விடுகிறீர்கள்.
அது,அந்த விஷயம் பற்றிய என் அறிவியல் அணுகுமுறை.காரணம்,மனமற்ற நிலைக்கும்,பரவச
நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை.மனம் கடந்தும்,காலம்
கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு,உடலுறவு தவிர
வேறு வழியில்லை.தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான்
காட்டுகிறது.நான் மக்களுக்கு இந்த உண்மையை சொல்வதால்தான் உலகமே என்னை கண்டனம்
செய்கிறது.
காமத்திலிருந்து அதி பிரக்ஜைக்கு செல்வது பற்றி நான் பேச போய்,உலகம்
முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்.கண்டிக்கப்பட்டேன்.ஏன்
கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை.என்
புத்தகம்,முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பன்னிரண்டு
பதிப்புகள் வெளிவந்துள்ளன.எல்லா சன்னியாசிகளும் அதை படித்து விட்டார்கள்.
இந்து,சமண,கிறித்துவ,புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும்
சரி,சன்னியாசிகளே அந்த புத்தகத்திற்கு சிறந்த வாடிக்கையாளர்கள்.
சிலமாதங்களுக்கு முன்பு,இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது.என் செயலாளர்
ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார்.சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்த
புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள்.காமத்திலிருந்து கடவுளுக்கு.அதை வாங்கி தமது
ஆடைக்குள் மறைந்து வைத்து கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள்.அவர்கள்
வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர்.
காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகம்,காமத்தை பற்றியதன்று.அது,அதிபிரக்ஜை
பற்றியது.அதை,ஒருவன் கண்டு கொள்ள,ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும்.தன் எண்ணங்களை கடந்து எல்லையற்ற மவுனத்திற்கு செல்ல சிற்றினபம் இருக்கிறது.அது ஒரு கண
பொழுதுதான் என்றாலும் அது நிரந்தரமானது.எல்லாமே அங்கே நின்று போய்
விடுகிறது.நீங்கள் எல்லா கவலைகளையும்,எல்லா இறுக்கங்களையும் அப்போது மறந்து
போய் விடுகிறீர்கள்,என்பதை சுட்டி காட்டுகிறது அந்த புத்தகம்.
காமத்திலிருந்து அதிபிரக்ஜைக்கு செல்வது சாத்தியம் என்பதை நான் சொல்லி கொண்டு
வருகிறேன்.உங்களுக்கு அதில் மகிழ்ச்சி.உங்கள் காதில்
விழுவது,காமத்திலிருந்து என்பது
மட்டுமே.அதிபிரக்ஜைக்கு என்பதை நீங்கள் காதில் போட்டு கொள்வதில்லை.
காமம் வெறும் ஆரம்பம் மட்டுமே அது முடிவானது அன்று.அதை ஒரு ஆரம்பமாக ஏற்று
கொள்வதில் எந்த தவறும் இல்லை.அதையே பிடித்து தொங்கி கொண்டிருந்தால்தான் தவறாக
முடியும்.
சுதந்தர உறவு பற்றி நான் எதுவுமே உபதேசிக்கவில்லை.இந்தியாவின் மடத்தனமான மஞ்சள்
பத்திரிக்கைதனம்தான்,என் தத்துவம் முழுவதையும் அந்த இரண்டு சொற்களில் அடக்கி
விட்டது.650 புத்தகங்கள் வெளியிட்டு விட்டேன்.ஒரு புத்தகம் மட்டுமே காமம்
பற்றியது.மற்ற 649 புத்தகங்களை பற்றி யாரும் கவலை பட வில்லை.காமம் பற்றி பேசிய
அந்த ஒரு புத்தகம்தான் அவர்களுக்கு பிரச்சனை.அது கூட காமம் பற்றியது
அன்று.அதுவும்,காமத்தின்
ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றியது.உண்மையில் அது
காமத்திற்கு எதிரான நூல்.
அவர்கள் செய்வதெல்லாம்,மக்களுக்கு தவறான தகவலை கொடுப்பது,பிறகு அந்த தவறான
தகவலின் அடிப்படையில் பழி தூற்றுவது.என்னை அவர்கள் நியாயமான முறையில்
வெளிப்படுத்தவே இல்லை.இல்லையென்றால்,இந்தியா புத்தி கெட்டது என்று நான்
நினைத்திருக்கவே மாட்டேன்.
தந்திரா தத்துவத்தை வெளியிட்ட ஒரு நாடு கஜுராஹோ,கொனார்க் போன்ற கோயில்களை
உருவாக்கிய நாடு முட்டாள்தனமானதாக இருக்க முடியாது.நான் சொல்வதை விளங்கி கொள்ள
முடியாததாக இருக்க முடியாது.கஜுராஹோ எனது சாட்சியம்.தந்திரா இலக்கியங்கள்
எல்லாமே என் சாட்சியங்கள்.தந்திரா போன்றவை தாக்கு பிடித்து இருந்த நாடு இது
ஒன்றுதான்.உலகத்தின் எந்த நாட்டிலும் காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றும்
முயற்சி நடைபெறவே இல்லை.நான் அதைதான் செய்து
வருகிறேன்.ஆனால்,பத்திரிக்கையாளர்களுக்கு யதார்த்தத்தில் விருப்பம்
இல்லை.அவர்களுக்கு பரபரப்பில்தான் ஈடுபாடு.
RAJAJI JS. 19022016
No comments:
Post a Comment