ஒளி படைத்த கண்களை பெற ஆயுர்வேதத்தில் இருக்கு ரகசியம் !
கண் பார்வையின் வளத்தைக் குறைக்கும் சூழ்நிலையின் நடுவில்தான் நாம் இன்று வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.வெயில், நெருப்பு போன்ற புறக்காரணங்கள் உடல் சூடு அதிகரித்திருக்கும் போது அதைக் தணித்துக் கொள்ள உடனடியாக குளிர்ந்த நீரில் மூழ்குவதாலும், தூரத்திலுள்ள பொருட்களை உற்று நோக்குவது, தூக்கமின்மை, தும்பு, தூசு, புகை கண்ணிற்படுவதாலும், உண்ட உணவு செரிக்காமல் வாந்தியாகும் நிலையில் அதை அடக்குவதாலும், இரவில் அதிக அளவில் திரவ உணவைச் சாப்பிடுவதாலும், மலம்- சிறுநீர்- கீழ்க்குடல் காற்று அகியவற்றை பலவந்தமாக அடக்குவதாலும், சினங்கொள்வது, துயரமுறுவது இவற்றாலும், தலையில் அடிபடுதல், அதிக அளவில் மதுபானம் அருந்துதல், பருவ காலங்களுக்குத் தகுந்தாற்போல் உணவு மற்றும் செயல்களைச் செய்யாதிருத்தலும், படுத்துக்கொண்டே தொலைக்காட்சியில் இருட்டில் நாடகம், சினிமா போன்றவை பார்ப்பது, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காதிருத்தல் போன்ற காரணங்களால் கண்ணில் புரை வளர்தல், பார்வை பலவீனம் ஆகிய உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கண் பாதுகாப்பிற்கு செய்யவேண்டியவை :
கண் பாதுகாப்பில் முக்கியமாக வைகறை துயிலெமுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முந்தைய இரண்டு மணிநேரத்திற்கு முன்னரே எழுந்து சுத்தமான தண்ணீரையும் பருகுதல், பல் தேய்த்து வாயில் நீர் நிரப்பிக் கொண்டு கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவுதல், தினசரி அல்லது அடிக்கடியாவது தலைக்கும் பாதங்களுக்கும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், ராத்திரி தூங்கும் முன் உள்ளங்கால் நடுவில் பசுநெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல், உணவில் பொன்னாங்கண்ணி, ஊசிப்பாலைக்கீரை, பசுவின் பால் போன்றவை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் முதலிய எளிய முறைகள் கண்களுக்கு விசேஷ பலம் தரும் வழிகளாகும்.
நமது உறுப்புகளில் உள்ள புலன்களுள் கண்தான் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.பண்ணைக் கீரை, சிறு கீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து உண்ணல். இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல், பௌர்ணமியன்று இரவு சந்திரனைப் பார்த்துக் கொண்டிருத்தல்.வாய் நிறையத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, கண்களை நன்கு திறந்து சுத்தமான தண்ணீரினால் கண்களில் தெளித்துக் கொள்ளுதல்.இரவில் படுக்கும் முன் திரிபலா சூர்ணம் த்ரைபல கிருதம் என்னும் நெய்யை லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை ஸ்பூன் தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண் குளிர்ச்சியாகும். கண்நோய் எதுவும் வராமல் இருக்கும்.
RAJAJI JS. 21.02.2016
No comments:
Post a Comment