சித்தர்தள பேரன்பாளர்களே !சித்தர்தாசனின் முழுநிறை வணக்கம் !1.சரீரத்தில் ஞான ரத்தினம்பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.
2."பிறத்தல் மிகவும் துன்பம். பின்பு விருத்த பருவம் பெருந்துன்பம். இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். இவையன்றி ஜனன, மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் அளவிறந்தனவாம். ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்”
3."ஈன்று வளர்த்த அன்னையும், தந்தையும் அநித்தியம். இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் அநித்தியம். தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம். ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள் 4."இந்த உலகில் மனிதர்கள் நானாவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள். இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிகின்றதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்”
நம்முள் இருக்கும் திருடர்களை கவனியாது புறத்தேயிருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு,விமர்சனம்,விசய ஞானம்,குருக்களை ஆராய்தல்,மற்ற ஆன்மீக மார்க்க அன்பர்களுடன் முரண்பாடு,தான் மார்க்கம் சரியானது என்ற அகங்காரம்,எனகாலத்தை வீணாகக் கழிக்கின்றோம்.சிந்தனை செய்து காலவிரையம் செய்யாமல் யோகம்,ஞான என சித்தர் மார்க்கத்தில் பயணம் செய்வோமா?பேரன்பாளர்களே !
Sunday, February 14, 2016
சரீரத்தில் ஞான ரத்தினம்பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment