கோவை ஆவாரம் பாளையம் போகும் வழியில் ராமகிருஷனா கல்லூரி எதிரில் ஒரு சிறிய கிளீனிக். .
வழி தெரியாவிட்டால் "இருபது ரூபாய் "டாக்டர் கிளீனிக் எங்க இருக்குங்க என்று கேட்டால் போது. . அனைவரும் வழி காட்டுவார்கள். .
சாதார காயிச்சல் என்று போனாலே ஆயிரக்கனக்கில் புடுங்கும் ஆஸ்பத்திகளுக்கு மத்தியில். . என்ன வியாதியாக இருந்தாலும். .அதற்க்கு தகுந்த ஆலோசனை. . கொடுத்து
குறைவான விலையுள்ள மருந்துகளை எழுதி கொடுத்து ஊசி (தேவைபட்டால்)
போடுவார். அவ்வளவு தான் இதற்க்கு அவர் வாங்கும் பணமே இருபது ரூபாய் தான். . அதுவும் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு இருந்தவர். சில்லரை தட்டுப்பாடால். .நோயாளிகள் கேட்டுக்கொண்டதற்க்கு இனங்க இருபது ரூபாய் வாங்குகிறார். .
சில வியாதிகளுக்கு நாட்டு மருந்து, அயுர்வேதம் தான் சிறந்தது என யோசித்தால் அதையும் அவரே கூறி அந்த அந்த மருத்துவர் பெயரை பரிந்துரை செய்து சீட்டு எழுதியும் கொடுப்பார். .
சீட்டை காட்டுங்க காசு கம்மியா வாங்குவாங்க புரியுதா என அதட்டுவதை கேட்க நன்றாக இருக்கும். .
முதல் முதலாக கேள்விபட்டதும் நான் நம்பவேயில்லை. . பிறகு போய் பார்த்தேன். . இதுவரை மூன்று முறை சென்றுள்ளேன். . அதில் கல் அடைப்பு பிரச்சனைக்கு ஒரு முறை போய் பார்த்தேன். .
தம்பி இதுக்கு நாட்டு மருந்து தான் கரெக்ட்டு என்று ஒரு சீட்டை எடுத்து எழுதி எந்த பஸ்ஸில் ஏற வேண்டும் இறங்கும் இடம். . சில அடையாளங்கள் என குழந்தைக்கு கூறுவதை போல் கூறி பாத்துட்டு என்னானு போன் பன்னி சொல்லு புரியுதா! என்பார்.
மிகவும் வயதானவர்களை வீட்டிலேயே வந்து பார்பார். .
வியாபாரமாகி போன இந்த மருத்துவ உலகில் சேவை மணப்பான்மையுள்ள சிலரில் இந்த "இருபது ரூபாய் "டாக்டரும் ஒருவர்.
No comments:
Post a Comment