Sunday, February 14, 2016

மூக்குத்தி குத்தும் பழக்கம்

சிறு
குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களே
மூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில்
சில வாயுக்கள் காணப்படுகிறது
இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும்
பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள்
நிவர்த்தியாகும்.காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும்
பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்
வலது புறமாக சுவாசம்
செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான
சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. நமது மூளையின்
அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள்
உணர்ச்சி களை செயல்படுத்தும்
இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு
அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.பெண்களின் இடதுபுற மூக்கில்
குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில்
குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது
இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம்
தான் அணிய வேண்டும்
இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு
நிலைப்படுத்தபடுகிறது.நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள்
மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக
இருக்கும்
இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து
குளிர்ச்சி அளிக்கும். மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு
மணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும்
ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள்,
உள்ளச்சோர்வு ஏற்படாமல் மூக்குத்தி தடுக்கிறது.
காதணி அணிதல் ( தோடு அணிதல்)
தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த
ஆபரணத்தை ஆண்களில் ஒரு பிரிவினர் அணிவார்கள்
காது குத்துதல் என்பது
தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. உலோகம்,
கண்ணாடி போன்றவற்றால் காதணிகள் அணியப்படுகிறது
காது சோனையில்
துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே மேலும்
வயிறும் கல்லீரலும் தூண்டப்படும் ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு
சரியாகும்.
வளையல் அணிதல்
வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல்
ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்பொழுது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடு
அதிகரித்துள்ளது
வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது
அதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில்
வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தனியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது. 💥இறை பணியில்"சித்தர்கள் தளம்"

No comments:

Post a Comment