நெய் சாதம் !!!
தேவையானவை :
பாஸ்மதி அரிசி & ஒரு கப், வெங்காயம் & 2, பச்சைமிளகாய் & 4 (பொடியாக நறுக்கவும்), சீரகம் & அரை டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி (விருப்பப்பட்டால்) & அரை டீஸ்பூன், பூண்டு, கிராம்பு & தலா 1 (நசுக்கிக் கொள்ளவும்), இஞ்சி & அரை துண்டு (பொடியாக நறுக்கவும்), முந்திரி & சிறிது, நெய் & 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு & ஒரு டீஸ்பூன், மல்லித்தழை & சிறிது, உப்பு & தேவையான அளவு.
செய்முறை :
கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து ஜாதிக்காய் பொடி, இஞ்சி, பூண்டு, முந்திரி, கிராம்பு போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, வதக்கியவற்றுடன் போட்டு, 2 நிமிடம் கிளறவும். பிறகு அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஆறியதும் மல்லித்தழை தூவவும். வெங்காய பச்சடி அல்லது தயிர் பச்சடி தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
RAJAJI JS. 14 02 2016
No comments:
Post a Comment