உன்னிடம்தான் பொக்கிஷம் !!!
பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குக் காலையில் சென்று தூரத்தில் உள்ள ஒரு மலையைப் பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பெரிய புதையல் உள்ளது என்று ஒருவன் கேள்விப்பட்டான்.
உடனே அவன் காலையில் அந்தப் பாலைவனத்தை அடைந்தான். சூரியன் கிழக்குத் திசையில் இருந்ததால், அவனது நீண்ட நிழல் மேற்குத்திசை தரையில் விழுந்தது. அவன் அந்தப் புதையலைக் கண்டெடுக்கும் எண்ணத்தில் மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அவன் தோண்டத் தோண்ட காலம் நகர்ந்து கொண்டே யிருந்தது. சூரியனும் கிழக்குத் திசையிலிருந்து மேலே எழும்ப ஆரம்பித்தான்.
சூரியன் மேலெழும்ப, மேலெழும்ப அவனது நிழலும் சுருங்கிக் கொண்டே வந்தது. அவன் தோண்டிக் கொண்டே இருந்தான். நண்பகலில் அவன் நிழல் அவனது காலடிக்குள் நுழைந்து கொண்டது. உண்மையைச் சொன்னால், அங்கு அவனது நிழலே இல்லை. அவன் நிழலைக் காணாமல், எங்கே தோண்டுவது என்று புரியாமல் அழுதுபுலம்பினான். அப்போது அவ்வழியே ஒரு ஞானி வந்துகொண்டிருந்தார். மணலைத் தோண்டிக் கொண்டிருந்தவனின் நோக்கத்தை புரிந்துகொண்ட ஞானி அந்த மனிதனிடம் சொன்னார். “இப்போதுதான் நிழல், புதையல் இருக்கும் சரியான இடத்தைக் காண்பிக்கிறது. அந்தப் புதையல் உனக்குள்தான் இருக்கிறது”
RAJAJI JS. 21.02.2016
No comments:
Post a Comment