எண்ணமே வாழ்வு !!!
உன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பெருமைப் படத்தக்க மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளை உன் மனக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி உனக்கே நீ ஊக்கப் படுத்திக்கொள்.
உன் வேலையை நீ மன அமைதியுடன் தான் செய்து தீர வேண்டும் என்று உனக்கே நீ கட்டளை பிறப்பித்துக் கொள்.
சாப்பிடும்போது கவலைப்படவோ,கோபப்படவோ,பொறாமைப்படவோ செய்யாதே.அவ்வுணர்வுகள் உண்ட உணவை ஒழுங்காக செரிக்க செய்யா.
உடல்,மூளையின் ஊழியன்.எண்ணம்தான் செயல்களின் தலைவன்.ஒரு விஷயத்தை நீ திரும்பத் திரும்ப எண்ணினால்,அது பலமடைந்து உன்னையும் அறியாமல் உனக்கு நலமளிக்கும் வகையிலோ,தீமை பயக்கும் முறையிலோ செயலாற்றுகிறது.
நல்ல எண்ணம் உடலை இளமை பொருந்தியதாக்குகிறது.ஒருவன் வளமான வாழ்வை விரும்பி வளமான எண்ணங்களை என்ன வேண்டும்.அவ்விதம் ஆகி விட்டதாக உணர வேண்டும்.
ஒரு செயலை நீ செய்யப் புறப்படும்போதே அது உன்னால் நிச்சயம் முடியும் என்ற எண்ணத்துடன் அடியெடுத்து வைக்க வேண்டும்.சந்தேகம் கூடாது.நம்பிக்கையே பலன் அளிக்கும்
விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும் !!!
எண்ணங்களின் பிறப்பிடம் மனம். மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம். எண்ண ஓட்டத்தை உணர்ந்து, விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும். அறியாமல் அதன் போக்கிற்கு விட்டு விட்டால் வாழ்க்கை தாழ்வடையும்.
எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடு தான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்.
* எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பி என்றால் அது மிகையில்லை.
* எண்ணங்களைப் பொறுத்தே நம் சொற்கள் அமைகின்றன. எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும். எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் எப்போதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
-வேதாத்ரி மகரிஷி
By vethathiri
RAJAJI JS
No comments:
Post a Comment