தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்புகள் பல உள்ளன.
* முகப்பரு வறண்ட சருமம் உள்ளவர்கள் நுங்கின் நீரை தடவினாலே போதும் விரைவில் பொலிவான சருமத்தை பெறலாம்.
* நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண்டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன.
* கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. (இதுக்கெல்லாம் மாத்திரை வாங்கி திங்காம நுங்கை தின்னுங்க)
* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.
* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.
* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.
* தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்குள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கின்றனர். ஆனா நம்ம ஊர்ல தாய்லாந்த விட பனைமரங்கள் அதிகம் சும்மா அங்கயும் இங்கயும் மிக மலிவா கிடைக்குற நுங்கை இன்னும் நாம் ஏளனமாக தான் பார்க்கிறோம்.
* இந்த கோடைக்கு ஒரு முறையேனும் நுங்கை ருசித்து பாருங்க.
RAJAJI JS. (16.02.2016)
No comments:
Post a Comment