Saturday, February 13, 2016

ஸ்படிக லிங்கம் தரிசனம்! [பிளாக் ஸ்டோன் கிரிஸ்டல்]

உலகிலேயே பெரிய கரும் ஸ்படிக லிங்கம்
தரிசனம்! [பிளாக் ஸ்டோன் கிரிஸ்டல்]

உலகிலேய அதிக எண்ணிக்கையில்
விதவிதமானக் கற்களில் உருவாக்கப்பட்ட 525
சிவலிங்கங்கள் சூழக் காட்சி தரும் அற்புதக்
காட்சி!
சிவபுரி தாம், தேக்ரா ,கோட்டா, ராஜஸ்தான்.

பல்வேறு கற்களில் வடிக்கப்பட்ட [நர்மதை
பாணலிங்கம்,பளிங்கு,போன்ற] 525
சிவலிங்கங்கள் சூழ்ந்து 15 அடி உயரமும், 14
டன் எடையும் கொண்ட ப்ளாக் ஸ்டோன்
எனப்படும் கல்லினால் செய்யப்பட்ட
பிரம்மாண்ட திருமேனி கொண்டு, பசுபதி நாத்
என்ற திருப்பெயர் தாங்கி ,சிவப்பரம்பொருள்
இங்கு அருள் பாலிக்கிறார்.

இந்தியா மட்டும் அல்லாது, வெளிநாட்டு
அன்பர்களும் இங்கு வந்து அரிய சிவலிங்க
வடிவைக் கண்டு, தரிசித்து அருள் பெற்றுச்
செல்கிறார்கள்.

அருமையான இயற்கைச் சூழலில், அற்புதமான
பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில்,
அருள்காட்சி தரும் 525 சிவலிங்கங்கள் சூழ,
அமிர்த சரோவர் என்னும் நதிக்கரையின்
தீரத்தில், சிவபுரி தாம் என்னும் இடத்தில்,
ராஜஸ்தான் மாநிலத்தில், கோயில்
கொண்டுள்ளார் பசுபதிநாதர்.

அன்பர்கள் தங்கள் கரங்களிலேய அபிடேகம்
செய்து அகமகிழ்கிறார்கள்.

சிவலிங்கங்கள் சூழ்ந்திருக்கும் அற்புத
வடிவமைப்பு வேறெங்கும் காண முடியாத
அழகு!.

மகாசிவராத்திரி இங்கு மிகவும் விசேசமாகக்
கொண்டாடப்படுகிறது.

ஆயிரம், கோடி லிங்கங்கள் என்றெல்லாம்
தலங்கள் உள்ளன: ஆனால் வேறுபட்ட
கற்களில், பல்வேறு வண்ணங்களில்,
வடிவங்களில் சிவலிங்கங்கள்
அமைந்திருப்பது, இந்த தலத்தில் தான்.

No comments:

Post a Comment