Sunday, February 14, 2016

பல் வலி, உடல் வலிக்கு...!!

பல் வலி, உடல் வலிக்கு...!!!

வாய்ப்புண்

வாயில் புண், வெடிப்பு இருந்தால் வலி இருக்கும். எரிச்சல் இருந்தால் 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் தேனை விட்டு நன்றாகக் கலக்கி இரண்டு வேளை வாய் கொப்பளிக்கவும், பிரச்சினை சரியாகிவிடும்.

துளசி

பல் வலி, பல் ஈறில் ரத்தம் வந்தால் துளசி 1 பிடி, தண்ணீரில் போட்டுக் கொதித்ததும் இறக்கி ஆற வைத்து வாய் கொப்பளிக்கவும். பிறகு 4 துளசி இலைகளை நன்றாக மென்று சாப்பிடவும். பல் வலி குறையும்.

பல் ஓட்டைக்கு

பல்லில் ஓட்டை இருந்து வலித்தால் 1 சிட்டிகை கிராம்பு பொடி, 1 சிட்டிகை பட்டை பொடி, 1 சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்த்துப் பல்லில் வைத்து அழுத்தி வைத்துக்கொண்டால் வலி குறைந்துவிடும். பொடியை வைத்து 5, 10 நிமிடங்கள் கழித்து வாய் கொப்பளிக்கவும்.

நல்லெண்ணெய்

தினம் 2 சொட்டு நல்லெண்ணெய் எடுத்துப் பல் ஈறின் மேல் நன்றாகப் படும்படி அழுத்தித் தேய்த்து வாய் கொப்பளித்தால் பல், ஈறுகள் பலப்படும்.

வெந்தயம்

இரவு 1 ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பயோரியா எனப்படும் ஈறுநோய் சரியாகிவிடும்.

கால் வெடிப்பு

காலில் வெடிப்பு இருந்தால் கிளிசரின், ரோஸ் வாட்டர், எலுமிச்சை ஜூஸ் மூன்றையும் கலந்து காலில் மசாஜ் செய்து அழுத்தித் தேய்த்தால் சரியாகிவிடும்.

தோல்

எலுமிச்சைச் சாறில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்து வந்தால் தோல் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

பாகற்காய்

தோலில் நாள்படப் பிரச்சினை இருந்தால் பாகற்காய் ஜூஸ் எடுத்துத் தோலின் மேல் தடவி வந்தால், தோல் நோய் சரியாகிவிடும்.

இஞ்சி

உடல் இறுக்கம், தோள்பட்டை வலி, கையைத் தூக்க முடியாவிட்டால் இஞ்சியைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். அந்த ஜூஸை எடுத்து 1 ஸ்பூன் உப்பு சேர்த்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்யவும். தொடர்ந்து இப்படிச் செய்தால் சரியாகிவிடும், கொஞ்சம் எரிச்சல் இருக்கலாம்.

பாலுண்ணி

காலில் அல்லது கையில் பாலுண்ணி இருந்தால் கருப்பாகத் தடித்து இருக்கும். இதற்கு விளக்கெண்ணெய் அல்லது கத்தாழை சதைப் பற்றை எடுத்துத் தேய்த்து வந்தால் போய்விடும்.

முக்கியக் குறிப்பு: தோலின் மேல் எதைப் போட்டாலும் முதலில் கொஞ்சமாக எடுத்து ஒரு இடத்தில் போட்டுப் பார்த்து எரிச்சல் இல்லை என்றால் தொடர்ந்து தடவவும்

RAJAJI JS.  (14.02.2016)

No comments:

Post a Comment