நெற்றிக்கண் என்ற நம் மூன்றாம் விழி சக்கரத்திலிருந்து நேர் மேலே இழுக்கப்படும் கோடு, மூளையை இரு சம பாகங்களாக இடம், வலம் என பிரிக்கிறது.
நாம் இடப்பகுதி மூளையை மட்டும் பயன் படுத்துகிறோம் அதுவும் பூரணமாய்ப் பயன்படுத்துவதில்லை! மற்ற பகுதி சும்மா கிடக்கிறது.
வளர்ச்சியே இல்லாமல்! ஆனால், இயற்கை எதையுமே தேவையில்லாமல் படைக்காது.
இந்த உலக வாழ்விற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை அறிய, செயலற்றுக் கிடக்கும் மறுபாதி மூளையை செயல்படுத்த வேண்டும்.
அந்த அரைப் பகுதி மூளைக்கு செல்லும் வழிதான் மூன்றாம் விழிச் சக்கரம்.அங்கேதான் நாம் திலகம் அணிகிறோம்.
அது வெளி அடையாளம் மட்டுமே.சரியான இடம், அதற்கு நேர் உள்ளே, ஒன்றரை அங்குல ஆழத்தில் இருக்கிறது.நெற்றிக்குள் இருக்கும் அந்த மையம், உலகு கடந்த, பொருள் கடந்த, அப்பால் பிரதேசத்திற்கான, கதவாக செயல்படுகிறது.
"கடவுள் நமக்கு பின்னால் மறைந்து இருக்கிறார்.அவருக்கு கொஞ்சம் வழி, நம் மூலமாக வருவதற்கு வழி கொடுத்தால்,அற்புதம் நம் மூலமாக வழிந்தோடுவதற்கு நாம் பாதையாக ஆகிவிடுவதாகும்".
No comments:
Post a Comment