Thursday, July 27, 2017

நட்பு பலப்பட நல்வழிகள்

!...............

1. நண்பர் பகிர்ந்த இரகசியச் செய்திகளை கசியாது காத்தல்.

2. நண்பர்களின் நலனில் அக்கறை காட்டுதல்.

3. தகுந்த நேரத்தில் நண்பர்க்கு உதவுதல்.

4. நண்பரின் செலவில் காலங்கழிப்பதைத் தவிர்த்தல். நாமும் நட்புக்காக செலவு செய்யும் பண்பை வளர்த்தல்.

5. நண்பரின் குடும்பத்தோடு நல்லுறவை வளர்த்தல். நம்பிக்கையோடும் நாணயத்தோடும் நடத்தல்.

6. மனம்விட்டு வெளிப்படையாகப் பழகுதல்; எண்ணங்களைப் பகிர்தல்.

7. நண்பரின் கருத்துக்கு மதிப்பளித்தல்.

8. பொறாமை, செருக்கு (ஈகோ), பொய், நடிப்பு அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

9. நண்பனின் தவறு, குற்றம், கேடு போன்றவற்றை உணரும்படி மென்மையாகச் சுட்டிக்காட்டித் திருத்துதல்.

10. போதை, புகை தவிர்த்து ஒழுக்கத்தோடு வாழ்தல்.

உறவுகளைவிட நட்பு மேலானது. எனவே, அதைச் சிதையாது காப்பது கட்டாயமாகும்!

RAJAJI JS .27.7.17

No comments:

Post a Comment