Saturday, July 1, 2017

ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வர


*ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?*

_📑வரி விலக்கு  பெற்றவை...._
◆பால்,
◆உப்பு,
◆காய்கறிகள்,
◆முட்டை,
◆மாவு,
◆பருப்பு வகைகள்,
◆லஸ்ஸி, தயிர்,
◆வெல்லம்,
◆இளநீர்,
◆பிரசாதம்,
◆இறைச்சி, மீன்,
◆தேங்காய்,
◆தேங்காய் நார்,
◆விலங்குகள் விற்பனை,
◆பதப்படுத்தப்படாத தேயிலை,
◆பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள்,
◆குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம்,
◆செய்தித்தாள்,
◆காது கேட்கும் கருவி, ◆கச்சா பட்டு, பருத்தி,
◆கல்வி,
◆மருத்துவம்,
◆உயிர்காக்கும் ரத்தம் *உள்ளிட்ட பல பொருட்கள்.*

📈 *_5 சதவீதம் வரி_*

◆சர்க்கரை,
◆தேயிலை,
◆வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள்,
◆சமையல் எண்ணெய், ◆பால் பவுடர்,
◆குழந்தைகளுக்கான பால் பொருட்கள்,
◆பேக்கிங் செய்யப்பட்ட பனீர்,
◆முந்திரி பருப்பு,
◆ரெய்சின்,
◆ரேஷன் மண்எண்ணெய்,
◆கியாஸ்,
◆செருப்பு(ரூ.500வரை),
◆ஆடைகள் (ரூ.1000 வரை), ◆அகர்பத்தி,
◆தென்னைநார் விரிப்பு

📈 *_12 சதவீதம் வரி_*

◆வெண்ணெய்,
◆நெய்,
◆பாதாம் பருப்பு,
◆பழரசம்,
◆பேக்கிங் செய்யப்பட்ட இளநீர்,
◆ஊறுகாய்,
◆குடை,
◆மொபைல் போன்.

📈 *_18 சதவீதம் வரி_*

◆தலைக்கு தேய்க்கும் எண்ணெய்,
◆டூத் பேஸ்ட்,
◆சோப்,
◆பாஸ்தா,
◆கார்ன் பிளேக்ஸ்,
◆சூப், ஐஸ் க்ரீம், ◆கம்ப்யூட்டர்கள்,
◆பிரின்டர்,
◆ஏ.சி. ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுதல்,
◆பிஸ்கட்ஸ், கேக், ஜாம்,
◆இன்ஸ்டன்ட் உணவுகள், ◆மினரல் வாட்டர்,
◆டிஷ்யூ பேப்பர்,
◆நோட்டுகள்,
◆உருக்கு பொருட்கள், ◆கேமிரா, ஸ்பீக்கர், ◆உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர்,
◆எடை எந்திரம்,
◆சி.சி.டி.வி,
◆ஆப்டிகர் பைபர்,
◆மூங்கில் பர்னிச்சர்ஸ்,
◆நீச்சல் குளத்தில் குளிப்பது,
◆மசாலா பேஸ்ட்,
◆காகித கவர்கள்,
◆ரூ.500க்கும் மேலான காலணிகள்.

📑 *_சேவைகள்...._*

◆ஏசி. ஓட்டலில் மது அருந்துதல்,
◆தொலைத் தொடர்பு சேவைகள்,
◆பிராண்டட் ஆடைகள்,
◆நிதி,வங்கிசேவைகள்.

📈 *_28 சதவீதம் வரி_*

◆பீடி,
◆சூயிங்கம்,
◆மொலாசஸ் ,
◆சாக்கலேட்,
◆பான் மசாலா, ◆குளிர்பானங்கள், ◆பெயிண்ட்,
◆டியோடரன்ட்ஸ்,
◆சேவிங் கிரீம்,
◆தலைக்கு அடிக்கும் டை, ◆சன்ஸ்கீரீன்,
◆வால்பேப்பர், 
◆செராமிக் டைல்ஸ்,
◆வாட்டர் ஹீட்டர், ◆வாஷிங்மெஷின்,
◆ஏ.டி.எம். சேவை,
◆வாக்கூம் கிளீனர்,
◆சேஷிங் செய்யும் எந்திரம்(டிரிம்மர்ஸ்),
◆ஹேர் கிளிப்,
◆ஆட்டோமொபைல்ஸ்,
◆மோட்டார் சைக்கிள்,
◆தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விமானம்.
[7/1, 9:53 PM] ‪+91 95854 36122‬: ஜி எஸ் டி வரியை தவிர்க்க  வழிமுறைகள்

பெருசா ஒன்னுமில்லைங்க நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்.

1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.

2. பயணத்தின் போது புலி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால்   வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜி எஸ் டி வரும் )

3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு பொய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க .

4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.

5. திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்க

6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் .

7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க .

9. பழைய  பழக்கங்கள் போல , நன்பர்கள் டூர் போனால் , நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள்

10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் .

இப்படி செய்தால்
உடல் ஆரோக்கியமாகும் .
மிகப்பெரும் பணம் மிச்சமாகும் .
சொந்தம் பெருகும்
மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.

உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும் .

No comments:

Post a Comment