நம் உடலில் உயிர் எங்கு உள்ளது?
“எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்”. நம் உயிர் நம் தலையின் நடுவில் அதாவது , நம் தலை உச்சிக்கு கீழ் நம் உண்ணாவுக்கு மேல் நம் இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் இருக்கிறது. அது துலங்குவது இரு கண்களில்.
நமது சிரசில் உச்சியில் இருந்து ஒரு நாடி கீழே இறங்குகிறது. அது நமது கண் காது மூக்கு உள்ளே சேரும் மத்தியில், வாயில் உள் அண்ணாக்குவின் சற்று மேல் வந்து நிலைகொண்டு , அங்கிருந்து இரு நாடியாக பிரிந்து இரு கண்களில் வந்து சேர்கிறது.இவ்விடத்தை லல்லாடஸ்தானம் , ஆன்ம ஸ்தானம், பத்தாம் வாசல், கடை கண் என்று சித்தர்கள் கூறுவர்.
“உச்சிக்கு கீழ் உண்ணாவுக்கு மேல் அணையா விளக்கு நிதம் எரியுதடி” – சித்தர் பாடல்.”மையமர் கண்டன்” என்று மாணிக்கவாசகரும் தலையின் மத்தியில் உயிர் உள்ளதை கூறிப்பிடுகிறார்
No comments:
Post a Comment