இறந்தவர்களை எரிக்க வேண்டும்,அடக்கம் ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும்:
வியாச முனிவர்தான் இறப்பவர்களை எரிக்கும் சட்டத்தை கொண்டு வருகின்றார்.ஒரு இறக்கும் சடலம் நீதி படி வாழாததால் அது புதைத்த ஒரு குறிப்பிட்ட அளவுகோளில் உள்ள இடத்தை அது அசுத்த படுத்தும்.ஆதலால் இறந்த உடலை எரிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருகின்றார்கள்.
மேலும் இறந்த உடலில் முதல் 2 மதங்களில் தோல்கள் தேயும்,பின்னர் சதை மறையும்,பின்னர் எலும்பு தேய ஆரம்பிக்கும்,கடைசியில் உள்ளது நரம்பு.நம் உடலிலுள்ள நரம்பின் நீளம் 5000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும்.அது அத்தனையும் கரைய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று மெய்ஞானிகளின் கணக்கு.அப்படி அது அழியும் வரை இறந்த அந்த உயிருக்கும் உபாதை என்றே,அதனை எரிக்க சட்டம் எடுத்து வைத்தது.அப்படி நரம்பு அழிந்த பின் அதற்கு "அலகை"(பிசாசு) தேகம் கொடுக்கபெற்று பின்னர் நரகில் தள்ளப்படும்.
மரணத்தின் வேதனையை குறிப்பிடும் பொழுது ,ஒருவனை ஒரு மரத்தில் கட்டி எல்லா அவயவங்களையும் கட்டி போட்டு வாய்க்கு பூட்டு போட்டு விட்டு,சுற்றி தீ வைத்து எரித்தால் என்ன வேதனை இருக்குமோ அதனை விட 70,000 மடங்கு அதிகம் இருக்கும் என்று வேதம் குறிப்பிடுகின்றது.இதையே மரணம்=மாரணம்=மா+ரணம்
மனித உயிர் 6 உயிர்களின் கலப்பு,இதை 7 வது உயிராகிய "ஆவல்" என்னும் உயிரால் கட்டப்பட்டு இந்த மனித தேகம் எடுக்கின்றது.எரிக்கும் பொழுது இந்த ஆவல் என்னும் உயிர் பிரிந்து அந்த 6 உயிரும் களைந்து விடும்.ஆதலால் அவர்களுக்கு வேதனை கிடையாது.இந்த 6 உயிர் சேருவதற்கு எத்தனனயோ பிறவி எடுத்துதான் அது கிட்டுமாம்.ஆதலால் மனித பிறவி சாதாரண பிறவி அன்று.தேவர்களாக மாறுவதற்கு உரிய வித்தே மனித பிறவி.இந்த பிறவியை வீனாக்கிவிட்டால்,அதை விட தோஷிதனம் படைத்தவன் இந்த உலகில் வேறு ஒருவனும் இல்லை.
எனவேதான் இறந்தவர்கள் எரிக்க வேண்டும்,அடக்கம்(ஜீவசமாதி) ஆனவர்களை மண் மறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்க பட்டது.
No comments:
Post a Comment