==================
மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன.
அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது.
மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது.
குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம்சங்கள் கிடைக்கின்றன.
மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிடமிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது.
இதனால் தான் தலைமுறை 7 என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள்.
இதில் திதி கொடுப்பவர் மனமும் பெறுபவர் மனமும் ஒரே அலைவரிசையில் தொடர்பு கொண்டு ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.
பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள்.
அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.
ஆக நம் முன்னோர்கள் ஆன்மீகம் எனும் பாணியில் அறிவியலை மறைமுகமாக பயன்படுத்தி இருப்பது விஞ்ஞானிகளால் ஏற்க வேண்டிய நிதர்சனமான உண்மை.
No comments:
Post a Comment