Tuesday, October 4, 2016

108


===

நம்முடைய வழி பாடுகளில்,நாம் பயன்படுத்தும் பூஜை பொருட்களெல்லாம் ஒற்றை படையில் இருக்கும்.குத்து விளக்கு இரண்டு,வாழைமரம் கட்டும்போது இருபுறமும் இரண்டு வைப்பார்கள்.ஆனால் சுவாமி படங்கள் ஒற்றை படையில்தான் இருக்கும். மாவிலை தோரணங்கள் கட்டப்படும்போது ஒற்றை ப்படை இலைகளாக வைத்துதான் கட்டுவார்கள்.மந்திர சாஸ்திரத்தில் இந்த எண்ணிக்கைகள் 108க்கும் 1008க்கும் மகத்தான மகிமை இருக்கிறது.இந்த 108  முறை மந்திரம் சொல்லப்படும் வேளையில் மந்திர அதிர்வுகளின் சாஸ்வதம்,நாம் இழுக்கின்ற மூச்சுக் காற்றில் கலந்துள்ள பிராணவாயுவோடு சேர்ந்து, இரத்தத்தோடு கலந்து விடுகிறது.அந்த மந்திரங்களை முழு மையான எண்ணிக்கையில் கூறி பூர்த்தி செய்யும்போது,நம் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை அடைந்து,மந்திர அதிர்வுகளையும் உள்வாங்கி ரத்தத்துடன் உடலின் பல பாகங்களுக்கும் சென்று சேர்கிறது என்று மெய்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.27 நட்சத்திரங்களையும்,ஒரு நாளின், நான்கு பாதங்களையும் கணக்கிட்டால் வருகின்ற எண்ணிக்கை 108 ஆகும்.அதோடு இந்த பிரபஞ்சமே ஒரு வட்டப்பாதை என்று சொல்லப்படுகிறது.ஒரு ராசி மண்டலம் என்பது 30 பாகையை கொண்டது.12 ராசி மண்டலங்கள் 360 பாகையைக் கொண்டது.நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து இந்த 360 பாகை சுழற்சியை பூர்த்தி செய்கிறது.இந்த உள் அர்த்தத்தை வைத்துதான் நாம் மந்திரங்களை 108 முறை ஜபிக்கிறோம்.

No comments:

Post a Comment