Monday, October 3, 2016

மனமும் நோயும

🌴ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரிசெய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முமு அறிவும் அவனிடம் உள்ளது.

🌴அதேபோல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

🌴நீங்கள் உறங்கும்போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவுதான்.

🌴வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

🌴உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

🌴பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது. உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

🌴புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர். ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள்தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள். வாழ்க வளமுடன்✋🏼

🌷🌷

No comments:

Post a Comment