Thursday, October 13, 2016

அசத்தலான வீட்டுக் குறிப்புகள் !!

!

1. வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும்.

2. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய்யை சூடு பண்ணி, மாவு பிசைந்தால் மிருதுவாக வரும்.

3. டீ தயாரிக்கும் பொழுது, அதனுடன் தேவையான சக்கரையைச் சேர்த்தால் டீ நல்ல நிறமுடன் இருக்கும்.

4. முருங்கைக்காய் குழம்பிற்கு துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு காரம் இறங்கும்.

5. பிஞ்சுக் கத்தரிக்காய் ஸ்டப்புடு பொரியல் செய்யும் போது காம்பை வெட்டாமல் அதன் எதிர்பாகத்தில் நான்கு துண்டுகளாக வெட்டி உள்ளே பொடியை வைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.

6. தயிர்ச்சாதம் செய்வதற்கு குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது, அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து வைக்கும் போது நன்றாகக் குழைந்து வரும்.

7. துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது, அதனுடன் இரண்டு சில்லு தேங்காய்ப் பத்தையை சேர்த்தால் நன்றாக பருப்பு வெந்து விடும்.

8. பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால், கெடாமல் நாளைக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

9. உள்ளிப் பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் எல்லம் வந்து விடும்.

10. வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பயனுள்ள யோசனைகள் !!!

1. கம்பளி உடைகளின் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும்.

2. கறுத்து மங்கலாகிப் போன அலுமினியப் பாத்திரங்களை எலுமிச்சை சாற்றினால் துடைத்தால், பளீர் என்று ஆகும்.

3. மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோதுமைக் கஞ்சி குடித்து வந்தால்,வயிற்று வலி வராது.

4. ஓமத்தை அரைத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கடுமையான தலைவலி நீங்கும்.

5. வெந்தயக் கீரையை சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு குறையும்.

6. காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று,தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்.

7. வாரம் ஒரு முறை பாகற்காயை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் மடிந்து விடும்.

8. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ,அடிக்கடி இளம் முருங்கக் கீரையை உண்டு வந்தால்,பால் அதிகம் சுரக்கும்.

9. சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை,வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம்.

10. ஆம்லேட் மேல் உப்பு,மிளகுத் தூளுடன் சீரகப் பொடியையும் தூவினால்,சுவையாக இருக்கும்.

11. பாயசம் நீர்த்துப் போனால்,அதில் வாழைப் பழத்தை பிசைந்து போட்டு,சிறிது தேனும் கலந்து விட்டால் சுவையான பாயசம் தயார்.

12. நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்,இளமையாக இருக்கலாம்.

13. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை, அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

14. வாழைப் பூவை நறுக்கிய பின் வினிகர் கரைத்த நீரில் கை கழுவினால்,கறை நீங்கி விடும்.

15. அசைவ உணவு சாப்பிட்ட பின் சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

http://www.muthukamalam.com/

RAJAJI JS

No comments:

Post a Comment