ு =====================================
இந்த உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு . இவை தச வாயுக்கள் எனப்படும். பிராணன் அபானன், உதானன் , சமானன் , வியானன் முதலிய இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன.(இவற்றைப் பற்றி தனியே ஒரு பதிவில் தருகிறேன்)
உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்ட...ு , எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
உதாரணமாக . . . .
ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.
சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .
ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும்.உயிர் பிரியும் . மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான் .உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும் .இவ்வாறாக புனரபி ஜனனம் , புனரபி மரணம் .
என்ற நிலை அமைகிறது .
பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.
பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment