Tuesday, October 4, 2016

வாசி யோகம்    

                                                                ==========
பிரபஞ்ச வெளியில் இருப்பது காற்று

. அது உடலுக்கு உள் வந்தால் மூச்சு .
மூச்சை நெறிபடுத்தினால் மூச்சு பயிற்சி அல்லது பிராணாயமம் . உரிய கால கணக்கோடு மூச்சை நெறிபடுத்தினால் உருவாவது வாசி.
.
வாசியை பிரானாயாமமாக செய்வது அடிப்படை வாசி யோகம் அல்லது வாசி பிராணாயமம் .

. . வாசியை ஆதார தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி அஷ்டாங்க யோகமாக செய்வது வாசி யோகம் அல்லது வாசிதவம் ..
வாசி யோகத்துடன் கல்ப மருந்துகள் உட்கொண்டு, கடும் பத்தியம் இருந்து பத்து ஆண்டுகள் செய்வது சிவா யோகம் . சித்தர் நிலை அடைய செய்யும் கடைசி தவம்

பத்தியம் : பெண் அல்லது ஆண் , புளி, உப்பு , போதை பொருள் , மாமிசம் , மீன் தள்ள வேண்டும் . ஒருநேரம் உணவு உட்கொள்ளவேண்டும்.

இதன்படி கடும் தவம் செய்பவர் சித்தர் நிலை அடைவார்கள். அஷ்டமா சித்தி பெற்று, அழியாஉடல் பெறுவார் .. இறைவனை காண்பார்கள் . பேரின்பநிலை கிடைக்கும் .
இத்தகைய சித்தா இறைவனுடன் சேர்ந்து தானே இறைவன் ஆவது ஞான நிலை . ஞான நிலை பெற்றவரே ஞானி ., முனி , ரிஷி , பிரம்ம ரிஷி .

இந்த படித்தரத்தில் நீங்கள் அடையும் நிலையை பொருத்தது கட்டாயமாக பலன் உண்டு . .
பயிற்சியை இடையில் விட்டு விட்டு பிறகு விட்ட இடத்தில் இருந்து தொடரலாம்
இதைதான் விட்டகுறை தொட்ட குறை என்பார்கள் .
யார் வாசியோகம் செய்வது ?.:.
வாசி யோகா பிராணாயாமம்வரை யாரும் பயிற்சி செய்யலாம் . . உலக வாழ்க்கை வெற்றி பெறும். அனைத்து செல்வமும் கிடைக்கும் .. உடல் உறுதி பெறும். குறைவு இல்லா இன்பம் கிடைக்கும் யாரும் எளிதில் வெல்ல முடியாது.
. .
வாசியோகம் செய்வதற்கு முன் திருமணம் செய்து உலக வழ்வில் பெற வேண்டிய புத்திர செல்வங்கள் பெற்று முடித்து . நாம் செய்யவேண்டிய உலக கடமையை செய்து முடித்து நாற்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள் செய்வது சிறப்பு . எழுபது வயதுவரை கடும் முயற்சி யுடன் செய்யமுடியும் . அதன் பின் என்பது வயது வரை செய்தால் நூறுவரை ஆயுள் . . என்பதிற்கு பின் பயன் இல்லை .
நாற்பது வயதிற்கு முன் வாசி யோகம் செய்தால் தவறு என்ன ?
சிறுவயதி வாசிதவம் , மற்றும் சிவா யோகம் செய்தவர் நீண்டநாள் வாழ முடியாது . திரு ஞான சம்பந்தர் , ஆதி சங்கரர் வள்ளலார், விவேகானந்தர் ஆகிய ஞானிகள் இளம் வயதில்பரு உடலை இழந்தார்கள் ..
இன்றைய ஆய்வு சொல்வது ; வாசிதவம் அல்லது அதற்க்கு ஒப்பான பயிற்சி இளம் வயதில் செய்தால், அவர்களின் விந்து அணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உள்ளது . இதனால் மட்டு தன்மை அல்லது குறை பாடு உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு

நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன.

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் .

இடகலை , பிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும்   இடகலை என்ற சந்திரகலை 16  நாத கலை சக்தி கொண்டது .   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை.இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில் உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற 4 கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும் .இந்த பிரபஞ்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது .  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும் சித்திகளுக்கும் அடிப்படை ..

சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம்
அப்பொழுது நாத கலை !6 விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலில் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம். இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது
.
அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்க்கு

முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . இவை நாடிசுத்தி எனப்படும் .அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் . 
இது பிராணயாமம்

இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம்  பழக வேண்டும் .

இதனால்  பிரபஞ்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம்  படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதிஆகி ஒருநிலைப்படும். உடல் உறுதி பெறும்
.
இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால்  சக்தி சமநிலை கெடும் .
மூச்சுப்பிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் . 

இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால்  உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெரும் . இதனால் நோய்கள் தீரும். துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம் .

தகுந்த ஆசிரியர் மூலம் முறையாகசெய்வது நலம்

No comments:

Post a Comment