Thursday, October 13, 2016

குரு பார்வை


=========

நாம் எங்கிருந்து வந்தோம்? எதற்காகப் பிறந்திருக்கிறோம்? எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வருவதில்லை மெய்பொருளான ஆதிநிலை அறிவுக்கு பிடிபடவில்லை.

சூதாட்டத்திலே இறங்கி விட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக் கொண்டு இருக்கக் கூடிய ஒருவனுக்கு, எப்படி குடும்பத்தை பற்றியோ, இலாப நஷ்டத்தைப் பற்றிய எண்ணம் வராதோ, அதுபோல இந்த இன்ப துன்பம் என்ற சூதாட்டத்திலே நம்மைப் பற்றிய நினைப்பே எழுதுவதில்லை.

இங்கு தான் குருவின் பார்வை, நினைவு, சொல் மனிதனுக்கு தேவையாக இருக்கிறது. அவருடைய உதவி கிடைக்க ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்,, தேடி இருக்க வேண்டும்.

நான் பிறந்து வளர்ந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவும் தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும் என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்திருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி, அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவை தேடிக் கொடுத்து விடும்.

ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய செயல்கள் .அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தைக் கொடுத்து விடுகிறது. அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் -

அந்தக் குருவினுடைய பார்வை, சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகின்றன.

குருவே சரணம்

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment