டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரி, உரக்கக் கத்திப் பேசுதல், சோக மற்றும் இழவு இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்து கெடுத்துவிடும்.
இதனால் வீட்டில் பணம் தாங்காமல் போகும், வீண் செலவுகள் ஏற்படும். அது மட்டுமின்றி உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்.
இதனால் தலைவலி, ரத்த அழுத்தம், இதய கோளாறுகள், மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...
முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, மாமியார் மருமகள் சண்டை, சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது, பிறர் தொழிலை எப்படி கெடுப்பது என்பதே காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது .
சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிப்பதில் டிவி முதலிடம் வகிக்கிறது.
தயவுசெய்து மக்களே,
இது போன்ற சேனல்களைப் புறக்கணியுங்கள்..
நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா.
No comments:
Post a Comment