கேள்வி : ஐயா, நீங்கள் கற்றுத் தந்துள்ள காயகல்பப் பயிற்சியின் எல்லா அம்சங்களையும் தினந்தோறும் செய்ய வேண்டுமா?
பதில் : தினந்தோறும் செய்வது தான் நல்லது. உலக உருண்டையானது தினமும் சுற்றிக் கொண்டே இருப்பதால் நம் உடலிலே உயிர்ச்சக்தி குறைந்து தளர்ச்சி ஏற்படுகிறது. அதிலிருந்து மீள்வதற்கான ஒரே மார்க்கம் நம் நாட்டுச் சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள காயகல்பப் பயிற்சியாகும். எனவே அதனைத் தினந்தோறும் செய்து தான் ஆக வேண்டும்.
நாளொன்றுக்கு 10 நிமிடம் இதற்காக ஒதுக்க இயலவில்லையானால் பிறகு எதற்குமே நேரம் இராது என்ற நிலை தான். இது போன்ற கேள்விகளையெல்லாம் யார் கேட்கிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலும் வேறு ஒரு வகையிலே நேரத்தை விரயமாக்குகிறவர்கள் தான். மாலை நேரம் தவறாமல் டிவி பார்ப்பது அல்லது சினிமாவுக்குச் செல்வது அல்லது நள்ளிரவு நேரம் வரை நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு வருவது என்ற பழக்கம் உள்ளவர்களுக்குக் காலையில் எழுந்து எப்படிக் காயகல்பப் பயிற்சி செய்யப் போகிறோம் என்று சந்தேகம் வரத் தான் செய்யும். அவற்றையெல்லாம் விட்டுக் காலத்தோடு தத்தம் பணிகளைச் செய்பவர்களுக்கு உடல் நன்றாகவே இருக்கும். இது போன்ற தயக்கம் சார்ந்த ஐயங்களும் எழாது.
தினம் காயகல்பப் பயிற்சி செய்ய நேரமில்லை என்பது வெறும் சப்பைக்கட்டு!
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment