புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிளிர்கிறது.
சித்த புருஷர் என போற்றப்படும் கரூவூரார் சோழ நாட்டில் கரூவூரில் சித்தரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரைப் பற்றிய பல அரிய தகவல்கள் கர்ண பரம்பரையாக அபிதான சிந்தாமணி நூலில் அழகாக சொல்லப்பட்டுள்ளது.
இவர் கரூவூரில் வேதியர் குலத்தில் பிறந்து ஞான நூல்களை ஆராய்ந்து சைவ மதத்தை கடைபிடித்து சிவயோக சித்தி அடைந்தவர்.
இவரது குல தெய்வம் அம்பாள். ஒரு முறை போகர் என்ற சித்தர் திருவாவடுதுறைக்கு வந்த சமயம் கரூவூரார் அவரை வணங்கி தம்மை சீடராக ஏற்க வேண்டினார். அதற்கு போகர் நீர் வணங்கும் அம்பாளை நாள் தோறும் வழிபாடு செய். அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று வழிபடும் முறைகளை கூறி உபதேசித்தார்.
அதன் பின் கருவூரார் அம்பாளை வழிபட்டு வந்தார். குருவின் வாக்கு உண்மையானது. கரூவூரார் எல்லாவித ஞானங்களையும் பெற்றார். இவ்வாறு இருக்கையில் அவர் ஜாதி சம்பிராயங்களை புறக்கணித்தை கண்டு ஆவேசமும், வெறுப்பும் கொண்ட வேதியர்கள் சிலர் இவரை பழிதூற்றி அவரது செயல்களை அறுவறுத்து பேசினர்.
இதனால் அவர்களுக்கு அறிவூட்டவும், மக்கள் வழிபாடு மூலம் தெய்வத்திடம் தம்மை ஒப்படைக்கவும் அம்பாளை வழிபட வைக்கவும், காலமில்லாத காலத்தில் அடை மழை பெய்ய வைத்தார். ஆற்றில் வெள்ளம் பெருக செய்தும், பூட்டி இருந்த கோவில் தகவு திறக்க செய்தும், பூதங்கள் தமக்கு குடை பிடித்து வரச் செய்தும், பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார்.
கரூவூரார் பல புண்ணிய ஸ்தலங்களை வணங்கிச் சென்று கஜேந்திர மோட்சம் என்னும் ஸ்தலத்தை அடைந்து அங்கு இருந்த முற்றீசரை அழைக்க அவர் தரிசனம் தந்து என்ன வேண்டும் என்று கேட்டார்.
இவர் மது வேண்டும் என்று கேட்டார். முன்றீசர் காளிக்கு கட்டளையிட காளி மதுக்குடத்துடன் கரூவூரார் முன்னிலையில் பிரசன்னமானார். இவர் காளியிடம் மீன் வேண்டும் என்று கேட்க காளி தேவி கோட்டவாதிகளை கேட்க அவர்கள் எங்கு தேடியும் மீன் கிடைக்காததை கண்டு அவர் வன்னிமரத்தை நோக்கினார். உடனே அம்மரம் மீன் மாரி பொழிந்தது.
அவரது யாத்திரை வழியில் ஒரு விஷ்ணு ஆலத்தை அடைந்தார். அங்குள்ள பெருமாளை கூவி அழைத்தார். பெருமாள் வராதாதை கண்டு அக் கோவில் பூசை இன்றி இருக்க கடவது என்று சபித்துவிட்டு அங்கிருந்து நீங்கி திருக்குற்றாலம் அடைந்தார்.
அங்கு சிவ தரிசனம் செய்து திருவிசைப்பா பாடி பொதிகையில் எழுந்தருளி இருந்தார்.
ஒரு முறை கரூவுரார் திருநெல்வேலியப்பனின் சன்னிதானத்து முன் நின்று நிவேதன காலமென்று அறியாமல் நெல்லையப்பா, நெல்லையப்பா, நெல்லையப்பா என மூன்று முறை கூவி அழைத்தும், மறு மொழி வராததால் கடவுள் இங்கில்லை என்று சொல்லி அவ்விடத்தை விட்டு செல்ல அந்த ஆலயத்தில் எருக்கு முதலியன முளைத்தன.
அதைக்கண்ட நெல்லையப்பர் ஒடி வந்து மானூரில் சந்தித்து தரிசனம் தந்து அடிக்கு ஒரு பொன்னும் கொடுத்து இவரை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து காட்சி தந்தார். அதனால் முன்பு முளைத்த எருக்கு முதலியன அழிந்தது. செந்நெல் என்று கூற ஆலயம் செழித்தது. பழைய பிராகாசம் உண்டாயிற்று.
திருவிடைமருதூர் ஆலயத்தை அடைந்து இறைவனை அழைக்க அவர் தன் தலையை சாய்த்து கரூவூரார் குரலுக்கு பதிலளித்தார். அதனால் இன்றளவும் திருவிடை மருதூரில் இறைவனது திரு உருவம் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது.
மானூரில் இருந்த நாட்களில் தஞ்சை மன்னன் கட்டிய கோவிலில் சிவ பிரதிஷ்டையில் அஷ்டபந்தனம் பல முறை இளகி பந்தனமாகமாக போயிற்று.
அதனால் சோழ மன்னன் வருந்திய போது ஒரு அசரீரி தோன்றியது. கரூவூரார் பந்தனமாகும் என்று கூறியது. அச் சமயம் போகர் தன் உருவம் மறைத்து அவ்விடம் வந்திருந்தார். அவர் அச் செய்தியை ஒர் நிலையில் எழுதி ஒரு காக்கையின் கழுத்தில் கட்டி கரூவூராரை அழைத்தார். ( போகர் தம் மன அலைகளின் மூலம் கரூவூராரை வரவழைத்தார் என்ற கூற்றும் உள்ளது )
கரூவூரார் கோவிலினுள் சென்று இலகாத பந்தனத்தில் தம் தாமபூல எச்சிலை உமிழ்து அஷ்டபந்தனம் செய்ய உடனே பந்தனமாயிற்று.
அதன் பின் திருவரங்கம் வந்தடைந்தார். அவ்வூரில் இருந்த அபரஞ்சி என்ற தாசி கரூவூராரின் தேக பொழிவையும், தேஜனையும் கண்டு இவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தாள். அபரஞ்சி தனக்கு இருந்த ஞான சம்பந்தமான அய்யங்களை கேட்டு சந்தேகம் நீங்கப் பெற்றாள்.
கரூவூரார் அரங்கநாதனை சந்தித்து இரத்தின பதக்கத்தை பெற்று வந்து இது உன் சேவைக்கு அரங்கன் சார்பாக நான் தரும் பரிசு என்று அளித்து, நீ எப்போது நினைத்தாலும் வருவேன் என்று கூறி யாத்திரை தொடர்ந்தார்.
அபரஞ்சி அந்த ரத்தின பதக்கத்தை அணிந்து வெளியே வந்த போது கோவில்தனியர் அவளை திருடி என்று சந்தேகத்து காவலிட்டு அவளை விசாரித்தார். அவள் எனக்கு இதை வேதியர் ஒருவர் அளித்தார் என்று கூறி கரூராரை நினைக்க அவர் வந்து என்ககு இதை திருவரங்க பெருமாளே கொடுத்தார் என்று கூறி அதற்கு சாட்சியாக பெருமாளை கூவி அழைத்தார்.
அதை கேட்ட பெருமாளும் ஆகாய வீதியில் பிரசன்னமாகி சாட்சியளித்தார். உண்ணையை உணர்ந்த அந்த ஊரார் கரூவூராரிடமும், அபரஞ்சியிடமும் தங்களை மன்னிக்க வேண்டினர்.
பிறகு கரூவூரார் கரூவூரை அடைந்து தம் இறைப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது செல்வாக்கையும் புகழையும் கண்டு வெறுத்த சில வேதியர்கள அவருக்கு பல வகையிலும் துன்பம் விலைவிக்க முயன்றனர்.
ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு தோல்வியே ஏற்பட்டது. இறுதியில் கரூவூராரை கொலை செய்யவும் துணிந்து அவரை துரத்த ஆரம்பித்தனர்.
கரூவூரார் பயந்து போல ஒடிச் சென்று திருஆனிலையப்பார் கோவிலை அடைந்து சிவபெருமானாய் வீற்றிருக்கும் பசுபதிஸ்வரை நோக்கி, ஆனிலையப்பர் என்று கூறி தழுவிக் கொள்ளவே இறைவன் அவரை ஜோதி வடிமாய் தன்னுள் ஏற்றுக்கொண்டார்.
இவரது ஆயுள் 300 ஆண்டுகள் 42 நாட்கள் என அறியப்படுகிறது. இன்றளவும் நீங்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கரூவூருக்கு தனி சன்னதி உள்ளது. இதனால் அங்கு சென்று மனம் உருகி வேண்டினால் உள்ளம் தூய்மை பெறுவததோடு, பதினாறு செல்வங்களும் குவியும்..
Sunday, October 23, 2016
கரூவூர் சித்தரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment