"ஒரு மரத்துக்கு அருகில் சென்று, அதனுடன் பேசுங்கள்(யாரும் பார்க்காதபோது). அதைத் தொட்டுத் தழுவிக்கொள்ளுங்கள். அதை உணர்வுடன் சந்தியுங்கள். அதன் அருகில் உட்கார்ந்து அந்த மரமும் உங்களை உணரச் செய்யுங்கள். அது உங்களை,"நீங்கள் மிகவும் நல்லவர். எந்தக் கெடுதலும் எண்ணாதவர்!" என்று உணரட்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த நட்பு அதிகரிக்க, நீங்கள் எப்பொழுதெல்லாம் அதன் அருகில் வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் அதன் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
நீங்கள் தொடும்பொழுதெல்லாம் ஒரு குழந்தையைப்போல குதூகலம் அடையும். நீங்கள் அருகில் உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் அதன் சிநேகத் தன்மையை உணர்வீர்கள். நீங்கள் துக்கமான மன நிலையில் அதன் அருகில் வரும்போதெல்லாம் துக்கம் மறைந்து போவதை உணர்வீர்கள்.அப்போதுதான் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் அந்த மரத்தை மகிழ்ச்சி அடையச் செய்யலாம். அதுபோல, அந்த மரமும் உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும்! வாழ்க்கை முழுக்கவும் ஒருவரை ஒருவர் நேசித்து, சார்ந்து இருப்பதை உணர்வீர்கள்.இந்த சார்புடைய தன்மையைத்தான், நான் கடவுள் தன்மை என்று அழைக்கிறேன்."
Monday, April 4, 2016
osho (கடவுள் தன்மை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment