Tuesday, April 5, 2016

ஓஷோ கேள்வி பதில

் 

#கேள்வி : ஓஷோ , நீங்கள் சில கேள்விகளுக்குப் பலசமயம் பலவிதமாகப் பதில் அளிக்கிறீர்கள் .

அது பலசமயம் முரண்பாடாகவும் இருக்கிறது .

இது எங்களைக் குழப்புகிறது .

இதற்கு என்ன காரணம் ? '

நீங்கள் இந்த உலகத்திலேயே ஒரு மிகுந்த முரண்பட்ட

மனிதர் என்ற கருத்து நிலவுவது உங்களுக்குத் தெரியுமா ?

#ஓஷோ_பதில் :

" ஆமாம் ! எனக்குத் தெரியும் .

அதில் எந்தத் தவறும் இல்லை .

ஒன்றை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் .

நான் மனதால் பேசுவது இல்லை .

ஆனால் மனத்தைக் கொண்டு பேசுகிறேன் .

அதாவது நான் மனதை ஒரு கருவியாக உபயோகிக்கிறேன் .

என் உயிர்த்தன்மைதான் ( Existence )

உங்களுக்குப் பதில் அளிக்கிறது .

அது ஒரே மாதிரியாக அச்சடித்ததுபோல பதில் கூறாது .

ஏனெனில் அது மாறிக்கொண்டே இருக்கும்
தன்மை படைத்தது .

மனத்தால் பேசும் உங்களால்தான் அப்படி ஒரே மாதிரியாகப் பதில் கூற முடியும் .

நீங்கள் ஞாபகத்தில் வாழ்கிறீர்கள் .

நான் அப்படி இல்லை .

நான் கணத்துக்குக் கணம்

அந்த உயிர்த்தன்மையைப் போல வாழ்கிறேன் .

நான் அப்போதைக்கப்போது செயல்படுபவன் .

இதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை .

நான் முழுமையில் முழுமையாக வாழ்பவன் .

என்னுடைய பேசும் ஒலி

உங்கள் இதயத்தைத் தொடட்டும் என்று கூறுகிறேன்

மூளையை அல்ல .

என் வார்த்தைகள் உங்கள் இதயத்தில்

உங்களை அறியாமலே ஒரு ஆன்மீக மாற்றத்தை உண்டுபண்ணும் .

தேவையானபோது மட்டும்

உங்கள் மூளையால் கேளுங்கள் ! போதும் .

அடுத்து , நான் பேசுவதை வைத்து

நீங்கள் ஒரு நிலையான கருத்தை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது

என்பதில் நானே உறுதியாக இருக்கிறேன் .

ஏனென்றால் ,

நான் இங்கு இருப்பது உங்கள் தலையைப் பெரிதாக ஆக்க அல்ல ;

மாறாக உங்கள் இதயத்தைப் பெரிதாக்கவே .

இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் !

மனதில் இருந்து செயல்படுவதை விட்டு விட்டு

உங்கள் இருத்தலில் செயல்படுங்கள் .

வாழ்வின் அற்புதம் புரியும்.

No comments:

Post a Comment