தனிமை ஆக்க பூர்வமானது ஆரோக்கியமானது
அது நீங்கள் நீங்களாகவே இருக்க முடிகிற மகிழ்ச்சி
தியானம் என்பது தனித்திருத்தலின் பரம சுகம் (bliss)
ஒருபோதும் யாரையும் சாராமல் வாழ முடிகிற போது
ஒருவர் உண்மையிலேயே வாழ்பவர் ஆகிறார்
உண்மையான தனிமையை நோக்கி செல்வதுதான் அகமுகப் பயணம்
அங்கே உங்களோடு யாரையும் அழைத்துச் செல்ல முடியாது
நீங்கள் உங்கள் உள்ளே செல்கிற கணத்தில் வெளியுல குடன் தொடர்பு துண்டிக்கப் படுகிறது
உண்மையில் ஒட்டு மொத்த உலகமும் மறைந்து போகிறது
தியானிப்பவர் தனக்குள் செல்கிற போது வெளியுலகம் மறைந்து போகிறது
தனிமையில் இருந்தே பரம சுகம் தோன்றுகிறது
அந்த தூய வெளியில் கரைந்து விடுங்கள்
தியானம் என்பது உங்களுடைய உண்மையான
சுயத்தை அக நிலைப் பண்பை உயர்த்துகிறது
ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான சுயத்தைக்
கண்டு
கொண்டு விட்டாலே
போதும்
அவன் தனித் தன்மை வாய்ந்தவன் ஆகி விடுகிறான்
அவன் தான் பெற்ற மெய்யறிவுக்கு ஏற்பவே அவன் வாழ்கிறான்
அவனுடைய வாழ்க்கை பேரழகும் நேர்மையும் கொண்ட தாயிருக்கும்
உங்கள் உள்ளுணர்வு திறனை வளர்த்துக்
கொள்ளவே தியானம் உதவுகிறது
ஓஷோ
தியானம்
The first and last freedom
No comments:
Post a Comment