Sunday, April 10, 2016

தொண்டை எலும்பு

தொண்டை எலும்பு அல்லது நாவடி எலும்பு என்பது மனிதரின் கழுத்தில் காணப்படும் எலும்பு ஆகும். எலும்புக்கூட்டில் வேறெந்த எலும்புடனும் இணைக்கப்பட்டிராத ஒரே எலும்பு இதுவாகும். இது கழுத்திலுள்ள தசைகளால் தாங்கப்பட்டு, நாக்கின் அடிப்பகுதியை இது தாங்குகின்றது.தொண்டை எலும்பு ஒரு குதிரை லாடத்தைப் போன்ற வடிவுடையது.தொடை எலும்பு (Femur)தொடையெலும்பு (Femur) இடுப்பெலும்புடன் இணைப்பு கொண்டிருக்கும் மேற்கால் எலும்பு. நடு உடலுடன், இடுப்பெலும்புடன், தொட்டுக்கொண்டிருப்பதால் மேற்கால் பகுதிக்குத் தொடை என்று பெயர்.தொடையெலும்பு மனித உடம்பில் வலிமையானதும் நீளமானதுமான எலும்பு ஆகும். சராசரி மனிதனின் தொடையெலும்பு 48 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் குறுக்கு வெட்டு விட்டம் சராசரியாக 2.34 செமீ (0.92 in) இருக்கும். மாந்தரின் தொடை எலும்பு முழுவளர்ச்சி அடைந்த ஓராளின் எடையைப் போல 30 மடங்கு எடையைத் தாங்கும் மிகு வலுவுடையது.நடக்கவல்ல, குதிக்கூடிய, பாலூட்டிகள், பறவைகள் போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளிலும்,பல்லிபோன்ற ஊர்வன இனங்களிலும் தொடையெலும்பே உடலுக்கு மிக அருகாமையில் உள்ள (most proximal)கால் அமைப்புப் பகுதியாகும்.தாடையெலும்புதாடையெலும்பு மண்டையோட்டைச் சேர்ந்த எலும்பு ஆகும். இதுவும், முக எலும்பும் சேர்ந்து முகத்திலுள்ள மிகப்பெரியதும்,மிகப் பலமுள்ளதுமான எலும்பை உருவாக்குகின்றன. இது முகத்தில் கீழ்த் தாடையை உருவாக்குவதுடன், கீழ் வரிசைப் பற்களையும் தாங்கியுள்ளது.குருத்தெலும்புகுருத்தெலும்பு (cartilage) என்பது பல விலங்கு இனங்களின் உடலில் உள்ள வளையக்கூடிய மென்மையான எலும்பு ஆகும். இது ஒரு வகை புரத நார்களாலும், வளைந்தால் மீண்டும் தன் நிலையைப் பெறும் மீண்ம நார்களாலும் (elastin) ஆன அடர்த்தியான இணைப்புத் திசு ஆகும். இது சவ்வு இழை மற்றும் வேறு பொருட்களினால் ஆனது. இவை அனைத்தும் திசுக்கூழ் எனப்படும் பாகுத் தன்மை கொண்ட பொருளில் அடக்கப்பட்டிருக்கும். குருத்தெலும்புக்குள் குருதிக் குழாய்கள் ஏதும் இருப்பதில்லை. இவற்றுக்குத் தேவையான சத்துப்பொருட்கள், திசுக்கூழ் ஊடாக அடர்த்தி வேறுபாடால் பரவல் முறையில் உறிஞ்சப்படுகின்றன. திசுக்கூழ் பல செயற்பாடுகளைக் கொண்டது. எலும்பின் இயக்கத்துக்கு வேண்டிய மழமழப்பான மேற்பரப்பை வழங்குவதும், எலும்புப் படிவுக்கான சட்டகமாகத் தொழிற்படுவதும் இவற்றுள் அடங்கும்.சுறா மீனின் உடல் முழுவதிலும் உள்ள எலும்பு இவ்வகை குருத்தெலும்பால் ஆனது. மனிதர்களின் உடலில் பல இடங்களில் குருத்தெலும்பு உள்ளது. எடுத்துக்காட்டாக தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழாயைச் சூழ்ந்திருக்கும் தைராய்டு குருத்தெலும்பு (Thyroid cartilage) என்னும் தொண்டைச் சுரப்பி குருத்தெலும்பு அவற்றில் ஒன்றாகும்.காறை எலும்புமனித உடற்கூற்றியலில், காறை எலும்பு (Clavicle) என்பது ஒரு நீண்ட எலும்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தோள் பட்டையின் ஒரு பகுதியாக அமைகின்றது. இது தனது சொந்த அச்சில் சுழலக்கூடியது. சிலரில், சிறப்பாகப் பெண்களில், தோளின் இப்பகுதியில் கொழுப்புக் குறைவாக இருப்பதன் காரணமாக, இவ்வெலும்பு கண்ணுக்குத் தெரியும் விதமாகப் புடைத்து இருப்பதைக் காணலாம்.காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் கிடையாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது மேற் கையை, முதல் விலா எலும்புக்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, தோள் எலும்பின் (scapula) உச்சியுடன், உச்சிக்காறை மூட்டில் இணைந்துள்ளது. இதன் உட்புற முனை உருண்டை வடிவிலும், வெளிப்புற முனை தட்டையாகவும்எலும்பு மச்சைஎலும்பு மச்சை (Bone marrow) என்பது எலும்புகளின் உட்பகுதியில் காணப்படும் மென்மையானஇழையமாகும். வளர்ந்தவர்களின்பெரிய எலும்புகளிலுள்ளஎலும்பு மச்சை குருதிக் கலங்களை (செல்களை,கண்ணறைகளை) உற்பத்தி செய்கிறது. என்பு மச்சையில் சிவப்பு என்பு மச்சை, மஞ்சள் என்பு மச்சை எனஇருவகைகள் உண்டு. சிவப்பு என்பு மச்சையிலிருந்துகுருதிச் சிவப்பணுக்கள், குருதி வெள்ளை அணுக்கள் மற்றும் குருதிச் சிறுதட்டுக்கள் உற்பத்தியாகின்றன. சில வெள்ளை அணுக்கள் மஞ்சள் என்பு மச்சையிலிருந்துஉருவாகின்றன. மஞ்சள் என்பு மச்சையின் நிறத்துக்குக் காரணம் கொழுப்புக் கலங்கள் அதிகம் உள்ளமை ஆகும். பிறக்கும் போது எல்லா எலும்பு மச்சையும் சிவப்பு ஆகும். வளர்ந்தவர் ஒருவரில் சராசரியாக 2.6 கிலோகிராம் என்பு மச்சை இருக்கும். இதில் ஏறத்தாழ அரைப்பங்கு சிவப்பு என்பு மச்சையாகும்.சில வகையான குருதிப் புற்றுநோயால் தாக்குண்டவர்கள்தாங்கள் உயிர்பிழைக்க, சில குறிப்பிட்ட இணக்கம் உடைய எலும்பு மச்சையைப் பிறரிடம் இருந்து பெற்று உள் செலுத்தினால் புற்றுநோய் உற்றவர்கள் முற்றிலும் குணம் அடையக்கூடும். இது சில வகையான புற்றுநோய்க்குத் தீர்வுதரும் ஒருநல்ல வழி. இதற்காக என்பு மச்சை கொடைக்காக பதிவகங்கள் உலகில் பல நாடுகளில் உள்ளன.

No comments:

Post a Comment