Saturday, April 9, 2016

பாபா மொழி


!

1. எங்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கின்றனவோ, அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன். இந்த இரண்டும் இல்லாதவர்கள் என்னை என்றுமே எட்டிப்பிடிக்க முடியாது!

2. வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி, உங்களைக் காப்பாற்றுகிறேன்.

3. பாபாவின் பாதங்களில் உங்கள் அகங்காரத்தை சமர்ப்பித்தால் தவிர, ஒரு வேலையிலே நீங்கள் வெற்றி பெற முடியாது. அகங்காரத்தை ஒழிப்பவர்களுக்கு வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது.

4. எனக்குக் கேட்கும்படி மிக சப்தமாக நீ என்னை அழைக்கிறாய்; உனக்குத் தெரியாமல் மிக ரகசியமாக நான் உன்னிடம் வருகிறேன்!

5. என்றைக்கு என் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தீர்களோ, அன்றே உங்கள் பாவங்கள் தொலைந்துவிட்டன; கெட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது

No comments:

Post a Comment