Sunday, April 10, 2016

நேரக் கொள்ளையர்கள்

நேரக் கொள்ளையர்கள்

'ஆராவமுதன்'
தினமலர் 10.4.2016
சிந்தனை களம்

இது நவீன, 'டிஜிட்டல்' உலகம். ஆள் பாதி - ஆடை பாதி என்பதுபோல், 'ஆன் - லைனில்' இல்லாதோர் மதிக்கப்படுவதில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பின்னி பிணைந்து விட்டது. பூட்டிய வீட்டில் திருடுவது போய், வீடு புகுந்து கொள்ளையடிப்பது போலத் தான், இந்த நவீன தொழில்நுட்ப ஆக்கிரமிப்பும். நாமே நமது மனக் கதவைத் திறந்து வைத்து, 'நேரத்தை கொள்ளையடித்துக் கொள்' என்று வாய்ப்பை அளிக்கிறோம்.

சொந்தச் செலவில் சூனியம் போல, நாமே செலவு செய்து, நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 'ஸ்மார்ட்போனை' வாங்கி, கையில் வைத்துக் கொண்டு அலைகிறோம்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து 'மொபைலை' வாங்கி, அதில், மாதாமாதம் நுாற்றுக்கணக்கில் 'ரீசார்ஜ்' செய்து, மற்றவர்கள் தரும் 'இலவச அறிவுரையை கேட்டு'

பல்வேறு 'ஆப்'களை தரவிறக்கம் செய்கிறோம்.

எப்போது பார்த்தாலும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர்' என்று, நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்களைத் தவிர, இதுவரை பார்த்திராத, அறிமுகம் இல்லாத, எங்கேயோ இருக்கும் பலருடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்.

வீடு, அலுவலகம், பஸ், ரயில் மட்டும் இல்லாமல், டாய்லெட் வரை கூட நமது தனிமனித சுதந்திரத்தை மற்றவர்களுக்காக செலவிடுகிறோம். 'செல்பி' என்ற புதிய போதை, உயிரைப் பறிக்கும்

அளவுக்கு சென்றுவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒவ்வொரு மாதமும், சில நாட்

களுக்கு ஒருமுறை, குறைந்த அளவு, 'ரீசார்ஜ்' செய்து பேசி வந்த நாம், தற்போது, '2ஜி, 3ஜி, 4ஜி' என்ற பரிணாம வளர்ச்சியால், தற்போது மாதந்தோறும், சில நுாறு ரூபாய்களை செலவிட வேண்டியுள்ளது.

இவ்வாறு ஒருபுறம், மொபைல் நிறுவனங்கள் நம்மிடம் பணத்தை பிடுங்கும் அதே நேரத்தில், இந்த சமூகவலைதளங்களால், நம் நண்பர்களே நமது நேரத்தை கொள்ளையடிக்கின்றனர். அதுவும் ஆரோக்கியமான, தேவையான செய்திகள் இருந்தாலும் பரவாயில்லை.

'குட் மார்னிங், குட் நைட்' என, 'வாட்ஸ் ஆப்'பில் உள்ள ஒவ்வொருவரும், இதுபோல் செய்திவெளியிட, இதைவிட முக்கியமான வேலையில்லை என்று அதையும் உடனடியாக பார்க்கிறோம்.

இந்த நேரக் கொள்ளையில் இருந்து தப்பிக்கலாம் என்று, ஒரு குறிப்பிட்ட, 'குரூப்'பில் இருந்து வெளியேறினால், எப்போதாவது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேசக் கூடிய, 'குரூப் அட்மின்' உடனடியாக தொடர்பு கொண்டு, நாம் ஏதோ பெரிய தப்பு செய்தது போல் பொரிந்து தள்ளுகிறார்.

சமூகவலைதளங்கள், மற்றோருடன் தொடர்பு கொள்வதற்கான மிகச் சிறந்த சாதனங்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதில், பல நன்மைகள் இருப்பதையும் மறுக்க முடியாது. அதேநேரம், அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால், இல்லை என்பதே பலருடைய பதிலாக இருக்கும். நள்ளிரவு, 12:௦௦ மணிக்குப் பின்பும், நமது துாக்கத்தை கெடுத்துக் கொண்டு, அரைக் காசுக்கு பெறாத தகவல்களையும், செய்திகளையும் பார்க்கும் போதை ஏற்பட்டு விட்டது.

நம் நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை நமக்கு

இல்லையா?

No comments:

Post a Comment