சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி! கை மருந்துகள்!!
இயற்கை முறையில் வைத்தியம் செய்து கொள்வது ஆரோக்கியமான உடலுக்கும் நாம் நோய் இன்றி வாழவும் வழிவகுக்கும்.
இப்பொழுது நோய் வந்தால் டாக்டரிடம் ஓடுவதும், கண்ட மருந்துக்களை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் பெரும்பான்மை மக்களின் வழக்கமாகி போனது. அதை முதலில் ஒழிக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு வீட்டிலும் பொடி செய்து வைத்திருக்க வேண்டிய அறிய மருந்துதான் ஐந்து மருந்து பொடி. இதை தயாரிக்கும் முறையும், உட்கொள்ளும் முறையும் பற்றி பார்ப்போம். இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சளிக்கு ஐந்து மருந்து பொடி:
சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
உட்கொள்ளும் முறை:
சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்.
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_892.html
No comments:
Post a Comment