Wednesday, February 3, 2016

மிளகு-சீரகம்-சுக்குப்பொடி கஷாயம்! சளி,ஜுரம் என்றால்....கை மருந்துகள்!

மிளகு-சீரகம்-சுக்குப்பொடி கஷாயம்! சளி,ஜுரம் என்றால்....கை மருந்துகள்!

.சளி,ஜுரம் என்றால்  இந்த கஷாயம் தான் .என் பாட்டியிடமிருந்து கற்றுக் கொண்டது.

மிளகு-2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வெற்றிலை - 2
காய்ந்த திராட்சை - 10
பனங்கற்கண்டு(Or Palm Sugar)-2 ஸ்பூன்
சுக்குப் பொடி - 2 ஸ்பூன் (காய்ந்த இஞ்சி அல்லது பச்சை இஞ்சி)

வாணலியை அடுப்பில் வைத்து மிளகு, சீரகம் போட்டு நன்றாக கருகும் வரை(பட் பட்டென்று வெடிக்கும்) வைத்து, 2கப் தண்ணீர் ஊற்றவும். வெற்றிலை, காய்ந்த திராட்சையை பிய்த்து போடவும். சுக்குப்பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். 1/2 கப் அளவிற்கு வற்றியவுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.

No comments:

Post a Comment