Monday, January 13, 2020

Maharishi thought Jan"13

*வாழ்க்கை மலர்கள்: ஜனவரி 13*

*இல்லற மலர்ச்சி*

உண்மையான நிலை என்னவென்றால், நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்து கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால், நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத் தான் அதிகமான அளவு செயல்பட முடியும். விளைவு வர முடியும். அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும், இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் அவர்கள் மூலமாகத் தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும்.

ஆகவே, இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான், என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே, இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர், உண்மையான தெய்வநிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

No comments:

Post a Comment