Tuesday, October 25, 2016

தர்மவான்கள் யார் என்று தெரியுமா?

🌠 தர்மம் என்று எதை சொல்வார்கள். பசியென்று வருபவர்களுக்கு ஒரு வாய் சாதம் தருவது, தாகம் என்று கேட்டவருக்கு தண்ணீர் தருவது என்பது தானம் செய்யும் நற்குணத்தை குறிக்கிறது.

🌠 தானம் செய்பவர்கள் அனைவரும் தர்மவான்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒரு செயலின் முக்கியத்துவத்தை அறிந்தே தானத்தின் மதிப்பு இருக்கிறது. அதை பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.

தர்மத்தில் சிறந்தவர்கள் :

🌠 ஏழைகளுக்கான தர்ம விடுதி அமைத்து தருபவர்.

🌠 படிக்கும் பிள்ளைகளுக்கு உணவு தந்து ஆதரிப்பவர்.

🌠 சாதி மதம் பார்க்காமல் அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு அளிப்பவர்.

🌠 பசுக்கு உணவளிப்பவர்.

🌠 அனாதைகளுக்கு உணவளித்து ஆதரிப்பவர்.

🌠 அனாதை குழந்தைகளை வளர்த்து காப்பவர்.

🌠 பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் வழங்குபவர்.

🌠 அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்து காரியங்கள் செய்பவர்.

🌠 அனாதைகளுக்கு உடையளிப்பவர்கள்.

🌠 ஏழைகளுக்கு இலவசமாக துணி வெளுத்து தருபவர், வைத்தியம் செய்பவர்.

🌠 பிறரின் துயரை துடைப்பவர்கள், தாகத்திற்கு தண்ணீர் வழங்குபவர்கள்.

🌠 பசு மாடுகள் உடம்பை தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல், சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்.

🌠 மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய் விடுதல்.

🌠 விலை கொடுத்தாவது பிறர் உயிர்களைக் காப்பாற்றுபவர்கள்.

🌠 சிறந்த தான தர்மம் என்பது தர்மம் செய்பவரின் நிலையை பொருத்ததல்ல. தானத்தை பெறுபவர்களின் நிலையை பொறுத்ததே.

🌠 தர்மம் செய்வதினால் மன நிறைவு கிடைப்பதோடு செய்த பாவங்களிற்கும் பரிகாரம் செய்வது போல் ஆகும்.

No comments:

Post a Comment