Thursday, October 13, 2016

தற்சோதனையின் அவசியம்                 

                            =====================                   தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும்பாலும் துன்பமே விளைகின்றது, துன்பமே பொருந்தா உணர்வு. அறிவு உயர்ந்து விழிப்பு நிலை பெறும்வரையில் ஆன்மா பழக்கத்தின் வழியே தான் செயல்களை ஆற்ற முடியும். எனவே, துன்பங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. இந்த நிலைமையிலிருந்து தன்னையே தான் மீட்டுக் கொள்ள நிச்சயமான ஒரு வழி “தற்சோதனை” தான்.தன்னைப் பற்றி, தன் இருப்பு, இயக்க நிலைகளைப் பற்றி, தன்னிடமிருந்து எழும் எண்ணங்களைப் பற்றி, செயல்களைப் பற்றி சிந்தனைசெய்து, நலம் தீது உணர்ந்து, தீமை களைந்து, நல்லன பெருக்கிப் பயன் காணும் ஒரு உளப்பயிற்சியே தற்சோதனையாகும்.இது மனிதன்அறிவை உயர்த்தி வாழ்வை வளப்படுத்தும் ஓர் நற்பயிற்சி.சமுதாயத்திலே நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய். குழந்தைகளை ஒழுக்கத்திலும்,கல்வியிலும் சிறப்படையச் செய்வதும் சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமை தான். ஒரு குழந்தையை நல்லவனாகக் கல்வியில் சிறந்தவனாக உருவாக்கினால் ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு அளித்து உதவுகிறாய் என்பது தான் பொருள். உன் வருவாயை விட்டுக் கடமைகளை மறந்து வெளியேறினால் நீ எங்கே போக முடியும்? அடுத்த வேளைக்குப் பசிவந்தால் நீ என்ன செய்யப் போகிறாய்? பிச்சை தானே எடுக்க வேண்டும். அது பிறர்க்கு சுமை அன்றோ?- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

No comments:

Post a Comment