Tuesday, October 25, 2016

அன்பும் கருணையும்


வேதாத்திரிதாசன் மாதவன்

அன்பு - ஒர் உணர்வு;
கருணை - என்பது அன்பின் அடிப்படையில் செய்யும் ஒரு செயல்.

அன்பு அக உணர்வு;
கருணை புற விளைவு.

அன்பு என்பதைச்சொல்லித்தர கல்லூரிகளோ பட்டம் அளிக்க கூடிய பல்கலைக்கழகங்களோ இவ்வுலகில் எங்கும் இல்லை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் - வ்ள்ளலாரின் அன்பின் வெளிப்பாடு. அதுவே மகரிஷின் இரண்டொழுக்கப்பண்பாடு.

1. எனது வாழ்நாளில், எவ்வுடலுக்கும், உயிர்க்கும் துன்பம் தர மாட்டேன் - இது அன்பு.
2. எல்லா உயிர்க்கும் துன்பம் போக்க, என் உதவிகளைச்செய்வேன். - இது கருணை.

நாம் அன்பு காட்டுகிறோமா, இல்லையா என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். அதையே வாய் வழியாக சொன்னால் வெறும் விளம்பரம். ஆனால் அதை செயல் வழி காட்டும் பொழுது தான் அன்பு கருணையாக – உதவியாக, தொண்டாக, சேவையாக மாற்றம் பெறுகிறது. அதணால் தான் என்னவோ மகரிஷி தன்னை உலக சமுதாய சேவா தொண்டன் என்று எளிமையாக வாழ்ந்தார்.

சேவை, தொண்டு என்பது பல லட்சம் நன்கொடை தருவதாலோ அல்லது பெறுவதாலோ வருவது அல்ல. ஒருவன் தன் உடல் / மன / சிந்தனை உழைப்பை அன்போடு தருவதால் மட்டுமே வருவது. அதணால் தான் மகரிஷி, மகான் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மற்றவர்கள் தலைவராக இருப்பதால் பயத்தோடு பக்தியால் வணங்கப்படுகிறார்கள். முதல்வராக இருப்பதால் தான் அதீத மரியாதை, இல்லையென்றால் அவமரியாதை கிடைப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

மனிதன் அவன் மனம் கொண்டு அளக்கப்படுகிறான்; அவன் வருமானம் கொண்டு அளக்கப்படுவதாக நினைத்து கற்பனை வலையில் சிக்கி சீரழிகிறான். அதணால் மனதை மனிதனை வளப்படுத்துவது என்பது அன்பு / கருணை இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை வலியுறுத்தி சாதனையை வேண்டுகிறார் மகரிஷி. வெறும் போதனையைக் கண்டு மக்கள்
மன வேதனையில் வாடுகிறார்கள் என்பது தான் உண்மை.

அன்பு செய்வோம், அறம் வளர்ப்போம்;
கருணை தொண்டு செய்வோம்;
மனித வளம் வளர்ப்போம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

செல்: 0 98860 67232;
இமெயில்: dr.madhavan@glowhy.org
வலைதளம்: www.glowhy.org

No comments:

Post a Comment